அவுட்லுக் எக்ஸ்பிரசில் தமிழ் யுனிகோடில் எப்படி மின்னஞ்சல் அனுப்பலாம்?
இந்த விளக்கத்தை நீங்கள் WinXP க்கு மட்டுமல்ல Win98 ற்கும் பயன்படுத்தலாம்.
ஒரு இலகுவான தமிழும் ஆங்கிலமும் கலந்த விளக்கம்.
இங்குள்ள screen shots எல்லாமே Outlook Express Version 6.0 ல் எடுக்கப்பட்டன. இதே விளக்கத்தை மற்றைய versions களிலும் பயன்படுத்தலாம்.
முதலில் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் செயலியைத் திறக்கவும்.
அதில் Tools ==> Options ==> என்பனவற்றை click செய்து பின்னர் Read என்னும் Tab ஐ Click செய்யவும்.
கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.
இப்போது Fonts என்பதனை Click செய்யவும். படம் கீழே உள்ளதைப் பார்க்கவும்
இதில் Unicode என்றிருப்பதை தெரிவு செய்யுங்கள்.
பின்னர் Proportional font என்பதற்கு aAvarangal அல்லது TheneeUniTx எழுத்தினை அல்லது வேறு ஏதாவதொரு தமிழ் யுனிகோட் எழுத்துருவினை உங்கள் விருப்பம்போல் தெரிவு செய்யுங்கள்.
Fixed-width font என்பதற்கு TheneeUniTx என்னும் எழுத்துருவைத் தெரிவு செய்யுங்கள்.
Fonts size Medium ஆகவே இருக்கலாம்.
Encoding ற்கு Unicode (UTF-8) என்பதனை நிச்சயமாகத் தெரிவுசெய்யுங்கள்.
இப்போது Set as Default என்னும் பட்டனை அழுத்தி Default encoding ஐ Unicode ஆக மாற்றிவிடுங்கள்.
பின்னர் OK பட்டனை அழுத்திவிடுங்கள்.
இப்போது கீழே உள்ள படத்தில் காண்பித்தபடி International Settings ஐ Click செய்து அதில் இருக்கும் Use default encoding for incoming messages என்பதனை check பண்ணிவிடுங்கள்.
இதனையும் OK செய்துவிடுங்கள்.
இனி Options Dialog ல் இருக்கும் Send Tab ஐ click செய்து அதில் இருக்கும் Mail Sending Format என்பதற்கு Plain Text என்பதனை தெரிவு செய்துவிடுங்கள். படம் கீழே காண்பிக்கப்பட்டுள்ளது
இனி மேலேயிருக்கும் படத்தில் காணப்படும் International Setting என்பதனை click செய்யும்போது கீழே காட்டப்பட்டபடி ஒரு Dialog Box தோன்றும் அதில் Default encoding என்பதற்கு Unicode (UTF-8) என்பதனைத் தெரிவு செய்துவிடுங்கள். இதனையும் OK பண்ணிவிட்டால் இனி என்ன?
WinXP பயனாளர்கள் எ-கலப்பையை இயக்கி யுனிகோட் Driver ஐ தெரிவுசெய்து அவுட்லுக்கில் யுனிகோட் தமிழில் தட்டெழுதவேண்டியதுதானே!
Win98 பயனாளர்கள் சுரதாவின் வலைப்பக்க 'புதுவை தமிழ் எழுதியை' திறந்து அதில் மேலேயிருக்கும் சாளரத்தில் ஆங்கிலத்தில் தட்டெழுத கீழேயிருக்கும் சாளரத்தில் யுனிகோட் தமிழ் தெரியும். அதனை அப்படியே copy செய்து Outlook ல் ஒட்டி அனுப்ப வேண்டியதுதான்.
மேலும் உதவி தேவைப்படுபவர்கள் ஒரு அஞ்சலை எனக்கு அனுப்புங்கள். உதவி காத்திருக்கின்றது.