ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

புதிய எழுத்துருமாற்றி (ஓவன்) அறிமுகம்

தமிழ் வலைப்பக்கங்கள், தமிழ்க் கோப்புகள் என பல இடங்களில் தமிழ் எழுத்தில்லாமல் விதவிதமான குறியீடுகளைப் பார்த்திருக்கலாம். அவை வேறு ஒரு தமிழ் எழுத்துருவில் இருப்பதை சிலர் அறிந்து, அதற்கான எழுத்துருவைத் தரவிறக்கி வாசிப்பர் அல்லது எழுத்துருமாற்றி மென்பொருளின் துணையுடன் விரும்பிய எழுத்துருவிற்கு மாற்றிப் படிப்பர். ஆனால் பொதுப் பயன்பாட்டிற்கு வந்த தமிழ் எழுத்துரு மாற்றிகள் பெரும்பாலும் பத்து பதினைந்து வகைகளை மட்டுமே மாற்றும் திறன் மிக்கது. மேலும் எந்த எழுத்துரு என்று அறிந்தபிறகே மாற்ற முடிந்தது. சில சமயங்களில் எழுத்துருவின் பெயர் தெரியாவிட்டாலும் குழப்பம் நிலவியது. அவற்றிற்கெல்லாம் தீர்வாகப் புதிய எழுத்துருமாற்றி ஓவன் அறிமுகமாகியுள்ளது.

இத்தகைய பல எழுத்துரு நுட்பங்களில் அனுபவமில்லாத புதிய பயனர் ஒருவர் எளிமையாகப் படிக்க விரும்பினால் அவருக்கான கருவியாக இந்த ஓவன் இருக்கும். இதன் சிறப்பு என்னவென்றால் எந்த எழுத்துரு என்று தானாகக் கண்டு மாற்றிக் கொடுத்துவிடும். கூடுதலாகத் தட்டச்சு வழுக்களையும் நீக்கிவிடும். பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழில் இருந்த வலைப்பதிவுகள் பெரும்பாலும் இதர குறியாக்கத்தில் தான் எழுதப்பட்டன. பாமினி, ஆதவின், மயிலை, இந்தோவெப், ஸ்ரீலிபி, கணியன், சாப்ட்வியு, வானவில், அஞ்சல், இணைமதி, டிஸ்கி, டேம், டேப் எனப் பல குறியாக்கங்கள் இருந்தன.

சில உதாரண வேற்றுக் குறியாக்க வலைப்பக்கங்கள்.
https://sites.google.com/site/aranganarumai
http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/sujatha.htm
https://www.studygs.net/tamil/attmotw.html
http://www.alhasanath.lk/mag/2013/february/files/assets/basic-html/page54.html
http://www.seithy.com/breifNews.php?newsID=97541&category=EntertainmentNews&language=tamil
https://www.studygs.net/tamil/attmotw.html
http://www.thiruarutpa.org/thirumurai/v/T191/romanized2/uykaith_thiruppathikam
www.maalaisudar.com/020807.shtml
kkalyan.tripod.com/novel2.html
http://cs.annauniv.edu/insight/Reading/index.htm
http://www.bairavafoundation.org/athmayoga.php
http://web.archive.org/web/20030213031414/http://www.vikatan.com/
http://tamil.joelonsoftware.com/
https://groups.google.com/forum/#!topic/24hrs-mails/4idlM8pdHKM
http://www.tamiloviam.com/html/Exclusive1.Asp

ஓவன் என்றால் ஓவியன் என்று பொருள். சீரற்ற வடிவங்களைச் சீராக்கி வரைவான். உணவைப் பக்குவப்படுத்துவது போல எழுத்துக்களையும் பக்குவப்படுத்தித் தருவான் இந்த ஓவன்.

மேலே உள்ள பக்கங்களில் உள்ளவற்றை நகலெடுத்து, ஓவனில் ஒட்டினால் சீராக்கி, ஒருங்குறியில் படிக்கத் தக்க வடிவில் தந்துவிடும். இவற்றைப் போல பல பக்கங்கள் உள்ளன. ஒருங்குறியில் மட்டும் தேடுவதால் கூகிளில் அதிகமாக, பிற எழுத்துரு கொண்ட பக்கங்கள் வருவதில்லை. autodetect என்று தேர்வு செய்தால் சுயயூகத்தால் எந்த எழுத்துரு என்று பயனர் சொல்லாமலே தானாகக் கண்டுபிடித்து மாற்றித் தரும். பயனரும் அதனை மாற்றிக் கொள்ளலாம். மாற்றப்பட்ட எழுத்துரு எது என்றும் கீழே காட்டிவிடும். ஆக ஒரு எழுத்துருவின் பெயரையும் இதன் மூலம் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

இனி எந்தக் குறியாக்கம் என்ற குழப்பமில்லாமல் தமிழ்ப் பனுவலை(text) நேரடியாக இதில் இட்டு ஒருங்குறியில் மாற்றிப் படிக்கலாம். பி.டி.எப். கோப்புகளில் இயல்பாகவே குறிநீக்கம் இருப்பதால் அங்கே தமிழ் எழுத்துக்களை எளிதில் வாசிக்க முடியும். அதேவேளையில் நகல் எடுத்து வேறு இடத்தில் வெட்டி ஒட்டினால் வாசிக்க முடியாது. இம்மாதிரி சீரற்ற எழுத்துக்களை ஓவனில் இட்டு சீராக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் தரவிறக்கிய பழைய கோப்பு, ஒருங்குறி அல்லாத நாளிதழ், அரசு ஆவணம் என்று எழுத்துச் சிக்கலின்றி தமிழைப் பயனபடுத்தலாம்.

மேலும் நுட்பரீதியான குறியாக்கத்தையும் ஒருங்குறிக்கு மாற்றித்தரும். உதாரணம் ஜாவா ஸ்டிரிங்கில் பயன்படும் யுடிஎப் குறியாக்கம் “\u0BA4\u0BAE\u0BBF\u0BB4\u0BCD\u0BA8\u0BBE\u0B9F\u0BC1” உலாவிகளில் முகவரியில் பயன்படும் யுடிஎப் குறியாக்கம் “%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D” அல்லது எச்.டி.எம்.எல். பொதி தமிழ்நாடு என பல வகை நுட்ப வடிவங்களையும் படிப்பதற்கு ஏற்ப மாற்றித் தரும்.

உங்களுக்குப் பயன்படும் இடங்களில் பயன்படுத்திக் கொள்க. இதில் சுமார் நாற்பது வகையான பிற குறியாக்கத்திலிருந்து ஒருங்குறிக்கு மாற்றினாலும் முன்பு பயன்பாட்டில் இருந்த பல இதர குறியாக்கங்கள் இணையத்தில் காணக் கிடைக்காததால் ஓவனில் அவை விடுபட்டிருக்கும். அத்தகைய விடுபட்ட குறியாக்க முறைகள் உங்களிடம் இருந்தால் அறியத்தரலாம். வழமை போல ஆலோசனைகளும், குறைகளும் வரவேற்கப்படுகின்றன.

இந்தச் செயலியைப் பயன்படுத்திப் பார்க்க இங்கே அழுத்துங்கள்

– நீச்சல்காரன்

 

ToTop