ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

இல்லறமாம் நல்லறம்

நம்மை பத்து மாதம் சுமந்து பெறுகிறவள் தாய்.
இச்சமயம் ஆசைப்பட்டதை எல்லாம் உண்ணாமல் நமக்காக நாக்கைக் கட்டுப்படுத்திக் கொள்ளகிறாள்.
தாயார் இறந்தவுடன் பட்டினத்தார் அழுதார்.‘பட்டினத்தாரே, நீங்கள் துறவியாயிற்றே தாயார் இறந்ததற்தாகத் தாங்களே அழலாமா…?
நாங்கள் எல்லாம் இன்ப துன்பங்களிலே கலந்திருப்பவர்கள்…
சிரிப்போம்.. அழுவோம்… நீங்கள் இப்படி செய்யலாமா ?
என்று சிலர் அவரைப் பார்த்துக்கேட்டார்கள்…
அதற்கு பட்டினத்தார், ‘அவர்கள் தாயாரா… இல்லை…எனது தெய்வம்….” என்றார்.
எவன் தூங்கி எழுந்தவுடன் ‘அம்மா ‘ என்ற தெய்வ சிந்தனையுடன்
எழுகிறானோ அவன் வாழ்க்கையில் உயர்ந்து சிறந்து விளங்குவான்.

வட்டியிலும் தொட்டியிலும்
மார் மேலும் தோள் மேலும்
கட்டிலிலும் வைத்து
என்னைக் காப்பாற்றி ….’ என்று பாடுகின்றார்.

தாய்மை என்றாலே அன்பு என்று பொருள். அன்பு பெண்களுக்கு இயற்கையாக உண்டு.
வீற்றியிருந்தால் அன்னை
வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தால் இன்று வெந்து நீறானாள்

‘முந்தி தவம்கிடந்து முந்நூறு நாள் சுமந்து
அந்திப் பகலாய் சிவனை தியானித்து ….’
-என்று கூறுகிறார் பட்டினத்தார்.

மனிதனுக்குப் பெருமையெல்லாம் அவனுக்குப் பண்பு வருவதால்தான்.
பண்பில்லாத மனிதன் வீதியில் போனால்,
”அதோ போகிறாரே… அவர் எம். ஏ., படித்தவர் எரிஞ்சு எரிஞ்சு விழுவார் …”
என்று அறிமுகப்படுத்தினால்… அத்தனை வருடம் அவன் படித்த படிப்புக்கு என்ன அர்த்தம் ?

மனிதன் நல்ல பண்புகளை அடையவேண்டும். பிறருக்கு உதவவேண்டும்.
இந்த உலகத்திற்கு நன்றி காட்டுகிறாய் என்று அப்போதுதான் பொருள்படும்.
இவற்றை எல்லாம் பெறுவதற்க்கு உனக்கு அளிக்கப்பட்ட துணைவிதான் மனைவி.
அவள் அன்பு நிறைந்தவள், பண்பு நிறைந்தவள்.
ஆண்களுக்கு உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள தெரியாது. ‘இன்று முதல் என் உடம்பை
உன்னிடம் ஒப்படைகிறேன்…’ என்று திருமணமானவுடன் ஆண் பெண்ணிடமும்
‘எனது உயிரைக் காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு’, என்று பெண்
ஆணிடமும் தங்களைத் தாங்களே திருமண நாளில் ஒப்படைத்துக்கொள்கிறார்கள்.

இதுவே ‘உயிரிடை என்ன…நட்பு ‘ என்று வள்ளுவர் சொன்னார்.

இல்லத் துறவறம் செய்யவேண்டும். இதனைதான் இந்து மதம் வலியுறுத்துகிறது.

இதனை தாயுமானவர் :-
மத்த மத கரி குல மென்ன நின்றிலகு
வாயிலுடன் மதி யகடு தோய்
மாட கூடச் சிகர மொய்த்த சந்திரகாந்த
மணி மேடை யுச்சிமீது
முத்தமிழ் முழக்கத்துடன் முத்து நகையார்களடு
முத்து முத் தாய் குலாவி
மோகத் திருந்து மென்? யோகத்தினிலை நின்று
மூச்சைப் பிடித் தடக்கிக்
கைத்தல நகைப்படை விரித்த புலி சிங்க மொடு
கரடி நுழை நூழை கொண்ட
கான மலையுச்சியிற் குகை யூடிருந்து மென்?
சுர தலாமலக மென்ன
சத்த மற மோன நிலை பெற்றவர்களுக்குய்வர் காண்!
ஜன்காதி துணிவி தன்றோ?
சச்சி தாநந்த சிவமே ‘ என்கிறார்

இதன் பொருள் இல்லறமும் துறவறமும் ஒன்றே என்பதுதான்.

ToTop