எனது “திருக்கயிலாய யாத்திரை”
காலம் கடந்தாலும் நினைவு மட்டும் பசுமையாக நேற்று நடந்தது போல்
உள்ளது அந்த நினையலைவுகளை உங்களுடன் இனிமையாக, பசுமையாக பகிர்ந்து
கொள்வதில் இன்பம் காணுகிறேன்.
[உங்களுக்கு போரடிக்காத வகையில்!?]“நித்தியமாய் நிர்மலமாய்; நிஷ்களமாய் நிரமயாய், நிறைவாய்,
நீங்காச் சுத்தமுமாய்த்; துரமுமாய்ச் சமீபமுமாய்த் துரிய நிறை சுடராய்;
எல்லாம் வைத்து இருந்த தாரகமாய் ஆ னந்த மயமாகி
மனம் வாக்கு எட்டாச் சித்து உருவாய் நின்ற
ஒன்றைச் சுகாரம்பப் பெருவெளியைச் சிந்தை செய்வோம் ..”
தோற்றம் அற்றதாக [என்றைக்கும் இருப்பதுதான் நித்தியம் என்பது, அப்படி என்றைக்கும் இருப்பதான் பரம்பொருளுக்குத் தோற்றமோ- முடிவோ இல்லைதானே.]
அழுக்கு அற்றதாக, உருவம் இல்லாதததாக ; நோய் இல்லாததாக தூய்மையாய்
இருப்பதாக, அன்பு இல்லாதவர்க்கு வெகு தூரத்திலும், அன்புள்ளம் கொண்டார்க்கு வெகு நெருக்கத்திலும்இருப்பதாகத் திகழ்வதும்,
சுடர்ப்பிழம்பாய் அனைத்திற்கும் நிலைக்கலனாகி, இன்பத்தின் உருவாகி,
மனம் மொழிகளுக்கு எட்டாத, அறிவுருவாய்;
நிலைபெற்ற ஒரு முதற் பொருளை மனத்தால் துதிக்கும்.
மோனப் பெருவெளியில்! மெளனத்தின் உயரத்தில், விண்ணளவு வளர்ந்து அந்த
வானவனின் உயரத்தில் அம்மையப்பன் நினைவில் மகிழ்ந்தே அமந்திருக்கும் மலைகள்.
மலைக்கு மலராக வெண்பனி பூக்கள்.
விண் ரசியங்களை மலைகளிலும், தடாங்களில், ஏரிகள், மலர்களிலும்,
மனம் என்னும் உள்ளளி – அகல் விளக்கிலும், ண்டவன் உருவிலும் கண்டு
அறிந்து அடங்கி விட்ட நிலையில் மனதின் மெளனங்கள்.
அமைதியான மலைகளுக்கிடையில் , பரந்த வெளியில் ஒற்றையடிப் பாதை ஒன்று ஒருவருமே அறியாத ஒரு ரகசியத்தை நோக்கி செல்வது போல் சென்றுக்கொண்டிருக்கிறது.
மனமோ , அந்த போ¢ன்ப பெரும் பொருளும் நம் மனதை பின் நடத்தி, முன்னால் சென்றுக் கொண்டேயிருக்கிறது.
மெளன அலையும் அதன் வழி மோனமும் எப்போதும் எங்கும் பரவி இருக்கிறது.
அமைதியும், அதன் வழி மோனமும் எப்போழுதும் நமக்கு என்றுமே சொந்தமாகிக்
கொண்டிருப்பதை ஆ ள் அரவமற்ற அந்த வெட்ட வெளியில் உணரலாம்.
உடலின் இன்பத்தைவிட உள்ளம் அமைதி மோனத்தில் மூழ்கி இன்பம் பெறும்.
எராளமான இன்பங்கள் எவ்வளவோ இருந்தும் கூட; சிற்றின்பத்தின் எல்லையில்
தன் சிறு உடலிலேயே கண்டாலும், போ¢ன்ப நிலையில் தன் பெருமைக்குரிய உயிருக்காக ஒரு மோன அலை காத்திருக்கும் இடம் ‘ திருக்கயிலாயம்
மானுட வாழ்க்கையில் நீண்ட ஒரு யாத்திரை எனலாம். மெய்ப்பொருளிடத்துத் தோன்றிய
மனிதன் திரும்பவும் அங்கு போய்ச்சேரும் பா¢யந்தம், அவனுக்கு வழியில் ஒய்வென்பதில்லை.
பல பிறவிகளின் வாயிலாக இப்பிரயாணத்தை தொடர்கிறான். இறுதியாக இறைவனை அணுகும்போது உண்டாகிற அனுபவங்களை ஒன்றாக திரட்டிக்காட்டுவது
திருக்கயிலாய யாத்திரை.
உலகில் இயற்கையாக அமைந்துள்ள அதிசயங்களுள் கயிலை ஒப்பற்றதாக கருதலாம்.
பூலோகத்திலுள்ள பல புண்ணியத்தலங்களுக்கு எல்லாம் தலையாது கயிலை என்பதை நாம் அங்கு சென்று வந்தால்தான் நன்கு உணரமுடியும்.
இந்த பிரபஞ்சத்தில் அஞ்ஞான இருளில் உழன்றுக் கொண்டுடிருக்கும் நாம் சர்வ சதாகாலமும் இறைவனை நினைக்க முடியாவிட்டாலும்,
இந்த யாத்திரை மூலம் சிறிது காலமவதும் நம்மை மறந்து, நம் உடம்பை மறந்து, நம் சுற்றங்களை மறந்து அவன் நினைவுடன் யாத்திரை செய்வது பெறும் பேராகும்.
உலகத்தை சிவசக்தி மயமாக காணும் பேறு இன்னும் கிட்டாதிருக்கலாம். எனினும் கயிலைச் சென்றால் தற்காலிகமாவது அப்பேறு நமக்கு கிட்டும் வாய்ப்பு அமையலாம்.
அடுக்கடுக்காக காயத்தைத் தொட்டுக் கொண்டு அமர லோகத்தோடு
உராய்கின்ற இமயமலைக்கு அதிபதியாக இருப்பது கயிலையங்கிரி.
அம்பாளின் அம்சமாக இருப்பது “மானசரோவரம்” ஏரி. 90 கி.மீ மையில் சுற்றளவுடையது.
சுமார் 19,000 அடி உயரத்தில் சமசதுரமாக இருக்கிறது.
இவைகளைக் காணும் ஆ ன்மாவின் நிலையில் ஒரு மெய்யுணர்வு காணலாம்.
“கனத்தத்தான் கயிலாத்து உச்சியுள்ளான் ”
“ஆனும் நாயகன் கயிலை இருக்கை கண்டல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் ”
– அப்பர்.