ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

கண்ணோடு கண்

பெருங்கதை – உஞ்சைக் காண்டம்
கொங்கு நாட்டின் பேரிலக்கியம் பெருங்கதை; கொங்குவேளிர் யாத்தது.
உதயணன் அக் காப்பியத் தலைவன்; யானையை அடக்கும் திறம் தெரிந்தவன்.
மாமன்னன் பிரச்சோதனன் உதயணனை வஞ்சகத்தில் சிறைப்படுத்தினான்.
யூகி, உதயணனின் உயிர்த் தோழன்; அறிவில் தெளிந்தவன்.
பிரச்சோதனனின் பட்டத்து யானை ‘நளகிரி’க்கு மதம்
ஊட்டினான். யானை நகரை கலக்கியது.

யானையை அடக்க முடியும்? ‘உதயணன்’ என்பதே மறுமொழியாயிற்று.

சிறை கதவு திறந்தது. உதயணன் யாழ் மீட்டி யானையை அடக்கினான்;
யாழில் மயங்கிய யானை மீதேறி மன்னன் பிரச்சோதனனின் மாளிகை சென்றான்.

யானை மதங் கொண்டதற்கான காரணம் யாதென வினவினன் பிரச்சோதனன் அவனுக்கு
மறுமொழி சொல்லத்தான் தலை நிமிர்ந்தான் உதயணன். ஆனால் அங்கே…..
விழிகளை ஈர்க்கும் காந்தத்துண்டு !
அவை மன்னவன் மகளாம் வாசவதத்தையின் விழிகள் !
பார்வைப் பரிமாறல்கள்….. அவை காதலின் தொடக்க வார்த்தைகள்….

ம்….

“ஆயத் திடையோன் பாசிழைப் பாவை
யானை மிசையோன் மாமுடிக் குருசில்
இருவரும் “அவ்வழி பருகுவனர் நிகழ….”

ToTop