கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இராமேஸ்வரம் சென்று இருந்தேன், குடும்பத்துடன்.
அது மார்கழி மாதம். நான் தங்கியிருந்த விடுதியிலிருந்து இரண்டு வீதி கடந்துதான் கோவில் செல்லவேண்டும்.
அந்த அதிகாலை வேளையில் சுப்ரபாத இசையுடன் பெண்கள் குளித்துவிட்டு கோலமிடுவது மனதுக்கும், கண்களுக்கும் ரம்மியமாக இருந்தது.
இந்த ரம்மியக் காட்சியினை ரசித்த எனக்கு,
ஒரு செயல் வியப்பினை அளித்தது. சொல்ல வைத்தார் போல் எல்லாக் கோலங்களில்
மீதும் கொஞ்சம் சாணம் வைத்து, அதன் மீது ஒரு பரங்கி பூவினை வைத்திருப்பது!?
இது குறித்து ஒரு வயது முதிர்ந்த மாதிடம் கேட்டேன்.
சிரித்துக் கொண்டே தெரியாது என்றார்கள்.
சரி, இதில் எதோ ஒரு சூட்சம இரகசியம் இருக்கிறது
மனதின் மூலையில் போட்டுவைத்தேன்.
பலா¢டம் விசாரித்தேன். சரியான பதிலில்லை.
சில, பல நூல்களை புரட்டும்போது மலரின் மகத்துவம் தெரிய வந்தது.
சாணம் ஒரு விஷ நாசக்கிருமி என்பது நாம் அறிவோம்.
அதனை கரைத்து வீட்டில் பூசும் போதும் – வீட்டின் முன் தெளிக்கும்
பாம்பு, பூராண், பூச்சுகள் போன்ற விஷ ஜந்துக்கள் வராது இருப்பதுடன்,
காற்றினையும் தூய்மைப் படுத்துகிறது.
[ தென்னாப்பிரிக்கா சென்று இருந்தபோதுபழங்குடி கறுப்பின {zulu}
மக்களையும், அவர்களின் வாழ்க்கை முறையினையும் காண வாய்ப்பு அமைந்து.
அவர்களும் இந்த சாணத்தை குடிசையில் மொழுகி இருந்தார்கள்.]
நமது முன்னோர்கள் எவ்வளவு நுட்பமான, விஞ்ஞான அறிவினைப்
பெற்று இருக்கிறார்கள் என்பதும் – அதனை சமயத்தோடு பூவினுள்
மணம் போல் இணைத்திருப்பதுங் கண்டு வியந்தேன்.
பரங்கி பூவில் ஒரு மருத்துவ குணமுண்டு.
அதனை தூர வைத்து முகர்ந்தால் – அதன் மகரந்தம் கற்றோடு கலந்து
சுவாசிக்கும் போது நம் உடலில் ஓர் ஆண்டுக்கான நோய் எதிர்ப்பு
சக்தி ஏற்படுகிறது.
[அதாவது Antibiotic தன்மை] விஞ்ஞானம் இப்போதுதான் நோய்த்
தடுப்பு மாத்திரைனை கண்டு பிடித்தது. ஆனால், நமது மெய்ஞானம்
எப்போதோ நடைமுறையில் கொண்டுவந்துவிட்டது. இன்றும் கூட
கிராமங்களில் குடிசை மீது பரங்கி கொடியினை பரவ விடுவதை
நாம் காணலாம்.
நமது வாழ்க்கை இயற்கையோடு இணைந்த , இயைந்த வாழ்க்கை.
நாம் நமது சமயத்தை, அதன் தத்துவத்தை , உள்ளார்ந்த நோக்கதை
புரிந்துக்கொண்டால் வாழ்க்கை நமக்கு இன்பமும்,
பயனும் அளிக்கும். முடிந்தவரை முயற்று பலன் பெறுவோம்.