ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

சமயங்கள்

துருப்பிடித்த பாத்திரத்தில் நல்ல பாலை ஊற்றலாமா?

‘இஸ்லாம்’ என்ற அரபுச் சொல்லுக்கு, ‘முழுமையான சாந்தி (அமைதி) நிலை’ என்பது கருப்பொருள்.

அனைத்து உயிர்களும்–அனைத்து ஆன்மாக்களும் ஆதிப்பரம்பொருளான இறைவனிடம் இருந்து வந்தவைதாம்.
இந்த ஆன்மாக்கள் தனித்து நிற்கும் காலமெல்லாம், இது சா¢யில்லாத குறைநிலை.இவை ஒவ்வொன்றும் தாங்கள் பிரிந்து வந்த மூலப்பரம்பொருளிடம் சேர்ந்து ஐக்கியமானால்தான்,
ஒவ்வொன்றும்சா¢யான நிறை நிலையடைந்ததாகும்.இதுதான் சமச்சீர் முழுமை நிலை
இதுதான் முழுமையான சாந்தி (” அமைதி”) நிலை–இதற்குப் பெயர்தான் இஸ்லாம்.

‘ஏ, ஆன்மாவே! நீ திருப்தியுறும் வகையிலும், உன்னை அனுப்பியவன் திருப்தியடையும் விதத்திலும்
நீ ஆ ண்டவனிடமே மீண்டும் சேர்வாய் ஆ க’ என்கிறது ‘குரான்.’

‘அனைத்தும் தங்கள் அசலை (மூலாதாரத்தை) அடைந்தே தீரும்!’ என்பது நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் திருமொழி,

‘சமயத்தின் முதன்மையான இலட்சியம் இறைவனை நெருங்கச் செய்யும் ஆன்மீகந்தான்’
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தருள்கிறார்கள்.

உலகில் உள்ள எல்லாச் சமயங்களும் இந்த அடிப்படை இலட்சியத்தில் ஒன்றுதான்.
இந்த அடிப்படை ஆ ன்மிகக் குறிக்கோளைத்தான் எல்லா வேதங்களும் எடுத்துச் சொல்கின்றன.

மனித குலத்திடம் உள்ள இயல்பான அறியாமையினால் ஏற்படும் மூட நம்பிக்கைகளுக்கெல்லாம் சமயங்களும் இறைநம்பிக்கையுந்தாம் காரணம் என்று பலர் பல காலமாகத் தவறாக
நம்பிக்கொண்டு வருகிறார்கள்!

எந்த மூடநம்பிக்கைக்கும், எந்தச் சமயத்திற்கும் எள்ளளவு சம்பந்தமும் கிடையாது.
ஒரு கோணத்தில் பார்த்தால், சமயங்கள் என்பவை, மனிதகுலத்தின் அறியாமைப்பிணியைப்
போக்கி, அறிவொளியூட்டி, ஆன்மிக முன்னேற்றப்பாதையில் மனிதகுலத்தை வழி நடத்திச் செல்லவந்த இலட்சிய இயக்கங்கள் தாம் சமயங்கள் என்று சொல்ல வேண்டும்.

அத்தகைய எந்தச் சமயமும் மூட நம்பிக்கைகளைப் போதித்திருக்கவும் முடியாது; வளர்த்திருக்கவும் வழியில்லை. பிறகு எப்படிச் சமயங்களின் பெயரால் மூடநம்பிக்கைகள் வந்தன?

“அழுக்கடைந்த பாத்திரத்திலே வைத்த அமுதமாகிவிட்டன சமயங்கள்!

துருப்பிடித்த ஒரு பாத்திரத்திலே நல்ல பாலை ஊற்றி வைத்தால் என்னாகும்? பாலே கெட்டது
என்ற பழிச்சொல்தான் ஏற்படும்.

மக்களின் அறியாமை துருப்பிடித்த சூழ்நிலைகளிலே அங்கு வருகை தந்த சமயங்கள்,
அங்கு மண்டிக்கிடந்த அறியாமைத் தீமைகளை — மூட நம்பிக்கைகளைத் தாக்கித் தகர்த்தெறியப்
போராடின. எல்லாச் சமயங்களும் ஆ ரம்பத்தில் இந்த அறப்போரில் வெற்றியும் கண்டன.
அதன் பிறகு நாளடைவில் படிப்படியாக நிலைமை மாறியது.

மனிதனிடம் உள்ள விருப்பு – வெறுப்பு, தன்னல வேட்கை, வன்முறை, இழிநிலை உணர்வு போன்ற
அறியாமை வெறிப்பேய்கள் பயங்கரமானவை; ‘தான்’ என்ற அகந்தை, இவற்றையெல்லாம் விடக் கொடியது.

இயேசுநாதர் தமக்கு முன் இருந்த யூதர்களைப் பார்த்துச் சொன்னார்,

”நீங்கள் உங்களுக்குரிய நோ¢ய வழியில் இருந்து தவறிவிட்டீர்கள். அதை நான் மீண்டும் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். தயவு செய்து என் பேச்சைக் கேளுங்கள்!”

அதனால் ஆ த்திரம் அடைந்த யூதர்கள் அவரையே சிலுவையில் அறைந்தார்கள்.

முஹம்மது நபி (ஸல்) தமக்கு முன் இருந்த மக்களைப் பார்த்துச் சொன்னார்,

”இறைவனின் நேரான பாதையை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி எச்சா¢க்கை
செய்யத்தான் நான் வந்திருக்கிறேன்!”

அவரைக் கல்லால் அடித்தார்கள்!
ஆ திசங்கரர் அன்றே மூடநம்பிக்கைகளைக் கண்டித்தார்.

சிறீ ராமானுஜர் ஜாதிப் பிரிவுகளையும்; ஏற்றத் தாழ்வுகளையும் எதிர்த்து அன்றே போராடினார்.

திரு அருட்பிரகாச வள்ளல் ராமலிங்க சுவாமிகள், சமய கம சாரங்களின் பெயரால் குவிந்துள்ள
சாரமற்ற சம்பிரதாயக் குப்பைகளைப் பலமாக, பகிரங்கமாகக் கண்டித்துத் தூய்மையான ஆ ன்மிக
நெறியை மட்டும் தனியே எடுத்துக் காட்டினார்.

இதோ நம் கண் முன்னால், நம் காலத்தில் வாழ்ந்த காந்தி அண்ணல் தீண்டாமை, ஜாதிப் பிரிவினை
ஆ கிய தீமைகள் ஒழிந்தால் தான் ஹிந்து சமயமே தழைக்க இயலும் என்று அறைகூவினார்.

அந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியாத அறிவிலிகள் அவரையே சுட்டுக் கொன்றனர்.

இந்த எடுத்துக்காட்டுகளில் இருந்து நமக்கு நன்கு தெரியவரும் உண்மை ஒன்றுதான்.
அதாவது எந்தச் சமயத்தலைவரும், எந்த மகானும் எந்தச் சமயத்தின் பெயராலும் மூட நம்பிக்கைகளை ஆதாரித்ததே கிடையாது;
மாறாகத் தீவிரமாக எதிர்த்துப் போராடித்தான் வந்துள்ளார்கள்.

சமயங்களின் பெயரால் ஏற்படும் மூடநம்பிக்கைகளுக்கான காரணங்களைக் கீழ்க்கண்ட வண்ணம் பிரிக்கலாம்:

1. பழக்கவழக்கங்கள்
2. கோழைத்தனம்
3. தன்னல விருப்பு – வெறுப்புகள்

1.பழக்கவழக்கங்கள் என்ற பலமான விலங்கு மனிதனை வெகு விரைவாக அடிமைப்படுத்தக்கூடியது.
ஏதோ ஒன்றைத் தொடர்ந்தாற்போல் பழக்கமாக்கிக் கொண்ட எவனும் அதில் இருந்து எளிதில் விடுபட முடிவதில்லை.

ஒரு மனிதன் ஓரிரு ஆ ண்டுக்காலங்களில் உண்டாக்கிக்கொண்ட சில பழக்கங்களில் இருந்து
விடுபடுவதே கடினம். அப்படியிருக்கும் போது பாட்டன், தந்தை மகன், பேரன் என்று தலைமுறை:
தலைமுறையாகச் சில மூட நம்பிக்கைகளைப் பலமாகப் பழக்கப்படுத்திக் கொண்டவர்களால்,
அவைகளில் இருந்து விடுபடுவது மிக மிகக் கடினம்.

இத்தகைய பழக்கவழக்கங்களால் சம்பிரதாயங்கள் உருவாகின்றன.

இந்தச் சம்பிரதாயங்கள் என்பவைதாம், உலகில் எல்லாச் சமயங்களுக்கும் 90 சதவிகித நடைமுறைகளாக இருந்து வருகின்றன.

எடுத்துக்காட்டாக, ஏதாவது ஒரு சமயத்தின் ஒரு சம்பிரதாயச் செயலை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதற்கும், அந்தச்சமயத்தின் அடிப்படை இலட்சியத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா
என்று பாருங்கள் : பெரும்பாலும் இருக்காது.

2.கோழைத்தனம்: சிறு வயதில் இருந்தே பெற்றோர்களாலும் சூழ்நிலைகளாலும் பயிற்றுவிக்கப்படும் விதத்தில் இருந்து, தன்னை விட வலிமை வாய்ந்தவைகளைக் கண்டதும் அஞ்சும் கோழைத்தன உணர்வு மனிதனிடம் வளர்ந்து வருகிறது.

தெய்வம் என்பது தனக்கு மிஞ்சிய சக்தி என்ற உடனே, அதன் கோப ஆ ற்றல்களில் இருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்ற குறுக்குவழிப் புத்தி பல மூடநம்பிக்கைகளை உண்டாக்கிவிடுகிறது!

இறைவன் சர்வசக்தியுள்ளவன் தான் —
ஆ னால், ஒரு சர்வாதிகாரியல்ல !
பரம்பொருள் பயங்கரவாதியல்ல–
பாசமே உருவான நம் தந்தை !

இந்த உண்மையை உணராமல் ஆ ண்டவனை அல்லது தெய்வத்தின் பல அம்சங்களைத் திருப்திப்படுத்தினால், பயம் நீக்கிப் பாதுகாப்புடன் பலன்களும் பெறலாம் ; சுகபோகங்கள் குறையாமல் சொகுசாக வாழலாம் என்ற குறுகிய தன்னல விருப்பங்களினால் சில சம்பிரதாயச் சடங்குகளையும் செயல்களையும் அடுக்கடுக்காக உண்டாக்கிக்கொண்டார்கள்.

பத்தி என்றால்தான் ஆ ண்டவனை நினைக்க வேண்டும் என்பது உண்டயான இறை பக்திக்குரிய இலக்கணமல்ல.

3. தன்னல விருப்பு – வெறுப்புகள், இந்த உலகின் அற்ப நலன்களுக்காக மட்டுமல்ல மறுமையின் சுவர்க்க போகங்களுக்காகவும், ஏன் மோட்சம், முக்தி என்று இறைவனிடம் வேண்டுவது கூட ஒருவகைக் குறுகிய தன்னலந்தான்.

இன்ன விரதம் இருந்தால், வாழ்க்கையில் இன்னன்ன பயன்கள் கிடைக்கும்; இந்தப் பூஜையைச் செய்தால், இப்படிச் செய்து ஆ ராதித்தால், இப்படி ‘பாத்திஹா’ ஓதினால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்றெல்லாம் செயல்படுவது கூடச் சா¢யில்லாத நிலைதான்.

இப்படியெல்லாம் செய்பவர்களைப் பற்றிப் பரமாத்மா பகவத் கீதையில் இதோ இப்படிக் கூறுகிறார்.
”(அர்ஜுனா!)
இவர்கள் காமிகள் (சாபாசங்களின் அடிமைகள்). சுவர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர்; பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்; போகத்தையும் ஆ ட்சியையும் வேண்டுவோர்;
பல வகையான கிரியைகளைக் காட்டிப் பேசுகிறார்கள்!”.

–பகவத் கீதை :2:43

பாரசீகப் பெண் ‘ராபியா பஸா¢’ என்ற அம்மையார் இறைவனிடம் இப்படிப் பிரார்த்தனை
செய்தார் :

‘இறைவா! சொர்க்கம் வேண்டும் என்று நான் உன்னைத் தொழுதால், எனக்கு அந்தச் சொர்க்கமே இல்லாமல் செய்துவிடு. நரகம் கூடாது என்று நான் உன்னை வழிபட்டால், அந்த நரகத்திலேயே என்னை எறிந்துவிடு. உனக்காக உன் அன்பு ஒன்றுக்காக மட்டுமே உன்னைத் தொழும் உள்ளத்தை மட்டும் எனக்குக் கொடு!”

பாரசீக ஆ ன்மிகத் தத்துவ மேதையான இமாம் கஸ்ஸாலி இப்படிக் கூறினார் :

‘சொர்க்கம் வேண்டும் என்பதற்காக இறைவனைத் தொழுபவன் ஒரு வியாபாரி ; நரகத்தில் இருந்து
விடுபடுவதற்காக இறைவனை வழிபடுவோன் ஒரு கோழை; இறைவனுக்காக மட்டுமே இறைவனை
வ ழிபடுபவன்தான் உண்மையான பக்தன்!’

ஒரு சமயத்தினுடைய அதிகாரபூர்வமான–உண்மையான–விதிமுறைச் செயல்கள் எவை என எப்படிக் கண்டுபிடிப்பது?

அதற்குரிய அளவுகோல் எது?

அனைத்துச் சமயங்களுக்கும் அந்தந்தச் சமயத்திற்குரிய வேத நூல்கள் தாம் அளவுகோல்.எடுத்துக்காட்டாக :

இஸ்லாத்திற்கு — ‘குர்ன்’.
கிறிஸ்துவத்திற்கு –‘பைபிள்’.
இந்து சமயம் எனும் சநாதன தர்மத்திற்கு பகவத்கீதையும் 108 உபநிஷத்துகள், தேவாரம்,
திருவாசகம்.திருக்குறள்.

‘குர்ன், பைபிள், பகவத்கீதை, உபநிஷ்த்துகள் தேவாரம், திருவாசகம்.திருகுறள், ஆகிய இவற்றுள் எதுவும் மூட நம்பிக்கைகளை உண்டாக்கவில்லை. எந்தச் சாரமற்ற சம்பிரதாயங்களையும் தாக்கவும் இல்லை !

தூய்மையான இறையுணர்வியல் (ஆன்மிக) நோக்கங்களுக்கு மாறாகச் சொல்லப்படும்.செய்யப்படும் வகைகள் அத்தனையும் பிற்காலத்தவர்கள் இட்டுக்கட்டிய இடைச்செருகல்களே என்பதில் சந்தேகமில்லை.

இஸ்லாத்தின் மூல மந்திரமான ‘லா இலாஹா இல்லல்லாஹு’ — ‘இறைவனைத் தவிர மற்றொன்று ஏதுமில்லை’ என்ற ‘கலிமா’வின் உட்பொருளும், ‘லைஸ·பித்தாராய்னி இல்லாஹு’ — ‘அவனன்றி அணுவும் இல்லை’ என்ற நபிகள் நாயம்(ஸல்) அவர்களின் திருமொழியும் அதையேதான் உறுதிப்படுத்துகின்றன.

இந்தப் புனித பூமியில் எத்தனை எத்தனை சாயங்களும் சமயப் பிரிவுகளும் இருந்தாலும்,
அவை அனைத்திற்கும் அடிப்படை தாரமான ஆ ன்மிக நோக்கும் இறையுணர்வும் ஒன்று தான்.

இருண்ட கானகங்களில் இருபத்திரண்டு ஆ ண்டுக்காலம் மகத்தான கடின தவங்களைப் புரிந்து,
இஸ்லாமிய ஆ ன்மிக வரலாற்றிலேயே, ஈடிணையற்ற மாபெரும் தவமேருவாகத் திகழும் அவதார புருஷர் ‘முஹயுத்தீன் ண்டகை’ அவர்கள், தமது ஆ ன்மிக உயர்நிலைக்குரிய ஒரே காரணம் உண்மையுணர்வுதான்’ என்று திருவாய் மலர்ந்தருள்கிறார்கள்.

திடமான இறை நம்பிக்கை, முழுமையான இறைநேசம், தீரமிக்க உண்மையுணர்வு–
இவை மூன்றும் எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான மும்மணிகள்.

இவை மூன்றும் எல்லாச் சமய இலக்கியங்களிலும் ஊடும், பாவுமாக ஊடுருவி நிற்க வேண்டும்!.

ToTop