ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

அம்பாளின் வேத வடிவங்கள்

ஆதி சக்தியான அம்மையின் வடிவம்

முதற்முதற் கடவுளாகிய பரம்பொருளின் அருள் ஆற்றலே சக்தியென வழங்கப்பெறுவது.
அவற்றுள்ளும் அம்மையாகக் கருதி வழிபடுவது முற்பட்டது.பிரபஞ்ச சக்திகளில் நான்குவித சக்திகள் இணைந்து இவ்வுலகத்தையே படைத்துள்ளது. இச்சக்திகளுள் முன்னோடியாக விளங்குவது ஆதி பராசக்திதான்.ஆதி பராசக்தியின் மூலமே பிரம்மதேவன்,மகாவிஷ்ணு,மகேஸ்வரன், சக்தி உட்பட நான்கு மகாசக்திகளாயினார். இந்த நால்வர்களையே சதுர்வேதங்கள் என்றும் குறிப்பிடலாம். இவர்களே சதுர் வர்ணகளும் ஆவர்.

பராசக்தி – பிரம்மதேவன் – மகாவிஷ்ணு – மகேஸ்வரன் இவர்களின் சக்திகளைக் கொண்டு நிபுணர்கள் அறிவியல் நிபுணர்கள் விஞ்ஞான ரீதியில் வாயுக்களாகச் சுட்டியுள்ளானர்.

பராசக்தி – கார்பன் டிஹோக்சிடா [Carbon Diokside]
மகாவிஷ்ணு – ஆக்சிஜென் [Oxygen]
பிரம்மதேவன் – நைட்ரஜன் [Nitrogen]
மகேஸ்வரன் – ஹைட்ரஜன் [Hidogen]

Asrto Physic என்ற விஞ்ஞான ஆய்வுவின் மூலம் இந்த நான்கு சக்திகளை அறிந்துக் கொள்ளலாம்.திரிமூர்த்திகள் என்று சொல்லப்படும் மூன்று தத்துவங்களும் ”எலக்ரோன்” [Electron], ”நியூட்ரோன்”[Neutron],”புரோட்டன்”[Proton] என்ற மூன்று சக்திகளுக்குட்பட்டவையே. எனவேதான் மகாசக்தியும் இம்மூன்று சக்திகளையும் தன்னையே வலம் வரவைத்துவிட்ட நியூக்லேயஸ் ஆகிறார். புராண காலத்தில் ஆதிபராசக்தியின் தலைமைத்துவத்தின் கீழ் பிரம்மதேவன் சிருஷ்டிப்பதிலும், மகாவிஷ்ணு காக்கும் கடவுளாகவும், மகேஸ்வரன் சம்ஹாரம் செய்வதற்கும் பொறுப்பாளர்களாகின்றார்கள்.

நவீன சாஸ்திரப்படி கண்ணோட்டமிடுகையில் ஓர் அணுவின் நடுநாயகமாக அதிபாரசக்தியாகயே திகழ்கின்றாள். அவளுக்குத் துணையாக எலக்ட்ரோன[Electron] பிரம்மதேவனும், ‘நியூட்ரோனாக [Neutron] விஷ்ணுவாகவும், ”புரோட்டோனாக”[Proton] மகேஸ்வரனும் விளங்குகின்றனர். இதைக் கண்ணுறும் பொழுது இந்தச் சக்தியே பிரபஞ்சத்தில் ஆதியிலே வெளியான அரும்பெரும் தத்துவங்களைக் கொண்ட ஒரு பெரி¢ய பொருளாக விளங்குகின்றாள்.

மகாசக்தி என்றாலே இரும்புச் சக்தி என்பது பொருள். ”கார்பன்”தான் உலகில் சக்தி பெற்ற உலோகம். இந்த உலோகமே காந்த சக்தி பெற்று உலகையே ஈர்க்கிறது. இச்சக்தி சூரியனில்அதிகமாக இருப்பதால் மற்ற கிரகங்களையும் அதை சுற்றி வரச் செய்கிறது. பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடந்தபோதுதான் இரும்புச்சக்தி வெளியானது. இதிலிருந்து செம்பு,சொர்ணம்,கனகம்,வைரம் வெளியானது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனால்தான் சங்க இலக்கியம் அம்மையைப் பழையோள் எனவும் குறிக்கிறது. அம்மையின் உருவம் வெறும் பெண் உரு மட்டும் அன்று. முதற் பொருள் ஞாயிறும் அதன் ஒளியும் போலவும்,மலரும் அதன் மணமும் போலவும்,தானும் தன் இயற்கை அருள் ஒளியும் என்று இரு திறப்பட்டு இயைந்து நிற்பது.
இதனால் பரம்பொருளின் தொன்மைக் கோலம் அம்மையப்பர் உருவாகவும்,நீலச்செம்மேனி (கிருஷ்ணனின் நீல நிறம்) உடையதாகவும் மறைகளிற் கூறப்படும். அவ்விறைவனது அருள் ஒளியே பெண்ணுரு ஆகும்.
அருள் ஒளி அல்லது அருளாற்றல் பல வகை ஆற்றல்களும் கொண்டு வழிபடுவது பண்டைய மரபாயிற்று. இயற்கையின் ஆற்றல்களுள் மழைப்பெயல் உலகம் உய்ய,வாழ இன்றியமையாதது.நீர் இல்லாது உலகமில்லை. திருவள்ளுவர் கூட கடவுள் வாழ்த்தில் வான் சிறப்பை கூறியுள்ளார்.
இத்தகைய மழைக்கு அதி தெய்வமுள்ள அருளாற்றலே மகா மாரியம்மன் ஆகும்.[மாரி-மழை] உலகியல் நடைபெறுவதற்கு மழை மிக முக்கியதுணைக்காரணமாகும். இவ்வருட்சக்தியையே பெண்ணாக உருவகப்படுத்தி,மக்கள் வழிபாட்டிற்குரிய தெய்வமாக,நமது முன்னோர்களான அறிவுடைச் சான்றோர்களை அமைத்தனர் என்று உணரும்போது அவர்களின் மதிநுட்பம் எத்துணை சிறப்புடையது என்று நமக்கு புலப்படுகிறது.தாய் அன்பே தலையாய அன்பு என்பதை உணர்ந்த நமது முன்னோர்களும், அருளாளர்கள்,
”அம்மை அப்பா” எனவும்,
”தாயிற் சிறந்த தயாவானத்தத்துவனே” எனவும்,
”தாயாயெனக்குத் தானெழுந்தருளி” எனவும்,
”பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து” எனவும் அழைக்கலாயினர்.

தாயுமான அடிகள்,
”பொல்லாத சேயெனில் தாய் தள்ளல் நீதமோ, புகலிடம் பிறிது முண்டோ” எனவும்,
”அகிலாண்டகோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னியென் மறை பேசும் ஆனந்த ரூப மயிலே” எனவும் பாடியிருப்பது நினைவிற் கொள்ளத்தக்கது.

தந்தையின் அன்பைவிட தாயன்பே தலை சிறந்தது என்பதை உலகியலறிவால் உணர்ந்த நமது முன்னோர்கள்,இறைவனின் அருளாற்றலை உலக நாயகியாக அகிலாண்டகோடி ஈன்ற அன்னையாக வழிபாடு செய்யலாயினர். பொல்லாத சேய்களின் பிழைகளைத் திருத்தி, ஜீவான்மாக்களைப் பரிபக்குவப்படுத்தி, இறைவன் திருவடிப் பேற்றுக்கு ஆளாக்குவதே அம்மை செய்யும் அருட்பணியென்று பணியென்று சித்தாந்த சாத்திரம் நமக்கு உணர்த்தும் உண்மையாகும். இந்த நிலையைத திருமூலர் தமது திருமந்திரத்தில்:-
‘’வாயும் மனமுங் கடந்த மனோன்மணி
பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவுங் கடந்த அரனுக்குத்
தாயும் மகளுத் தாரமு மாமே…’’
— என்கின்றார்.
அதாவது, அளவிலா ஆற்றலும், அருளுமுடைய ஆதிசக்தியின் வரப்பிரசாதத்தால் வந்த திரிசக்திகளாகிய பராசக்தி, மனோன்மணி,திரிபுரசுந்தரி, ஆகியோர் பரமசிவத்தோடிணைவதால் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களும் நிறைவேறுகினறன. எனவே அந்த ஆதிபராசக்தியே எல்லாமாய் இருக்கிறாள்.

அருட் சக்தியாகிய அன்னை பல்வேறு நாமங்களில்,காசியிலிருந்து கன்னியாகுமரி வரை
சிங்கப்பூரிலிருந்து மலேசியா வரை,அதனையும் தாண்டி தென்கிழக்கு ஆசிய வரை,ஏன் இன்றுஅமெரிக்கா, ஐரோப்பா வரை மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருகிறாள். சிறப்பாக தமிழ் நாட்டில்,சிங்கப்பூரில்,மலேசியாவில் ஆதிசக்தி அம்மன் ஆலயம் இல்லாத ஊரே இல்லை எனச் சொல்லலாம். மாரியெனத் தன்னருளை வாரி வழங்குவதால், மாரியெனப் பெயர் பெற்றாள் போலும். மக்கள் துயர் தீர்க்கும் புற்றாய் மாமருந்தாய், மகேஸ்வரியாய் விளங்குகிறாள்.ஏழாவது கர்ப்பமாக பிறக்கவேண்டிய கிருஷ்ணனின் கர்ப்பத்தினை எட்டாவது கர்ப்பமாக மாற்றி அமைந்தால் கருமாரியாக பெயர் பெற்றாள்.

சூரியன் மறைந்தாலும்,பிரிட்டீஸ் சாம்ராஜ்யம் மறையாது என்று எதற்கும் அஞ்சாது நாடு ஆண்ட வெள்ளையர்கள்,மாரியம்மனுக்கு மட்டும் மிகவும் அஞ்சி நடுங்கினார்கள்.அம்மை நோய் என்று கேள்விப்பட்டாலே இரு நூறு மைல் சென்று ஒளிந்து கொள்வர்.பெரும்பாலும் நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் கண் கண்ட தெய்வமாக விளங்கும் மகாமாரி,தன்னைச் சரணடைந்த ஏழை மக்களின் வினையை வேப்பைலையால் நீக்கி வருவது கண்கூடு.

இந்தப் பிரபஞ்ச வாழ்க்கையில் விரும்புவார் விரும்புவதை எல்லாம் நல்கும் பரதேவதையாகிய தம் நிமித்தம் தனது மெய்யன்பர்கள் விரும்புவதையும் நிறைவுசெய்கிறாள்.
சிலந்திப் பூச்சியானது தன்னிலிருந்தே தமக்கு வீடு அமைத்துக் கொள்வது போலவே அம்மன் தமது அன்பர்கள், அடியார்கள் ஆகியோரை உறுதிமிக்க மனதகத்தே இருந்து அருள்பாலிக்கிறாள்.

அன்னை மனத்தகத்தே இருந்து நல்ல எண்ணங்களை,நல்ல உணர்வுகளை தன்மைகளை
எழுப்புகிறாள்.அவர்கள் அதைச் சூழ்ந்து ஆழச் சிந்திக்கின்றனர்.அப்பொழுது அவர்கள் எண்ணத்தில் உருவெழச் செய்கிறாள். அப்பொழுது தாமும் அவர்களின் மனதோடு இருந்து அருட்பிரசாதமாய் பொழிந்து மகிழ்கின்றாள்

அன்னை அஞ்சொல் மொழியாள், அருந்தவப் பெண்பிள்ளை,
செஞ்சொல் மடமொழி, சீருடைச் சேயிழை,
தஞ்சமென்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு,
இன்சொல் அளிக்கும் இறவி யென்றாரே.

இயங்குதற்கு சக்தி தேவை. உலகம் இயங்குவற்கு இறைவனது ஒரு பங்கிலுறைந்து இருக்கிறாள்,
ஆதி சக்தியான அம்மை. இவள் ”கடவுளார் யாவர்க்கும் மேலையிறைவி” ஆவாள்;
”புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியம்”;

”சித்தி தரும் தெய்வமாகித் திகழும் பராசக்தியாய் விளங்குபவள்”;

”இவள் எல்லா உலகங்களுக்கும் நாயகி”;
”நான்முகி,நாராயணி, சாம்பவி, சங்கரி, சாமளை,மாதங்கி” –என்றெல்லாம் துதிக்கப்படுவள்.
இவளுடைய ”தாமம் கடம்பு; படை பஞ்ச பாணம்;தனு -கரும்பு”. இவளை அடியார்கள் ”பயிரவி;பஞ்சமி;
பாசாங்குசை; பஞ்சபாணி; சண்டி,காளி; வயிரவி; மண்டலி;சூலி; வாராகி; என்று ஏத்துவர்.

காரணம்,உலக வேதம் உலகமொழிகள் அனைத்திற்கும் அனாதியாயும்,ஆதியாயும் அமைந்திருக்கின்ற ஓங்காரவடிவத்தோடுங் கூடிய எல்லாப் பிரபஞ்சங்களையும் ஈர்த்துக்கொண்டு அசைவறக்கிடப்பது சிவதத்துவம் என்னும் அற்புதம். அந்த அற்புதத்தினும் அதியற்புதமாக, ஹ்ரீங் கார வடிவத்தோடுங் கூடிய காந்த சக்தியாய் எல்லாவற்றிலும் ஊடுருவி உயிர்ப்பாய் நிற்பது ஆதி சக்தியாம் சக்தி தத்துவம்.

இந்த ஆதிசக்தி வடிவம் பரபிரம்மாகிய சிவனின்று பிரிக்க முடியாத்தாய் அக்கினியிற் சூடு போலும்,வெளியாகவும் மறைவாகவும் அதனோடு ஒடுங்கி உறைந்து நிற்பது. திரிபற்ற நிலையை இரண்டற்ற நிலை, அர்த்தநாகரீச்சுர நிலை சிவசக்தி என்பார்கள் சான்றோர்கள்.சக்தியின் தத்துவம்

சக்தியின் தத்துவம்

இந்த ஆதிசக்தியையும் ஆதிசிவத்தையும் ஒன்றை விட்டு ஒன்றைத்தனியாக பிரிக்க முடியாது என்றாலும், உலக இயக்கத்திற்கு காரணமாகச் சிவத்திற்கு அசைவு,துடிப்பு,சலிப்பு ஆகிய தன்மைகளை உண்டாக்குகிறது
அந்த ஆதி சக்தி.அதனால்,சிவம் மறுநிலை எய்தி சூர்த்தெழுந்து படைத்தல், காத்தல், அழித்தல் என்னும், முத்தொழிலில் செய்ய முயல்கிறது.அதற்கேற்ப அச்சிவத்தொடு ஆதிசக்தி தன்மயமாகப் பராசக்தியை படைத்துக்கொடுக்கிறாள். சக்தி கூடும்பொழுதுதான் எல்லா இயக்கங்களும் நடைபெறும்.

சக்தி கூடும்போது உருவமற்றதற்கு உருவமும்,நாமம் மற்றதற்கு நாமமும், குணமற்றதற்குக் குணமும், தெளிவற்றதற்கு தெளிவும், நிலையற்றதற்கு நிலையும் உண்டாகின்றன. அதனால், அருட்பிழம்பாகிய ஆதிசக்தி
அந்தப் பராசக்தியின் உருவிலிருந்து,பிராஹ்மி,மகேஸ்வரி,கெளமாரி,வைஷ்ணவி,வாரகி,சாமுண்டி,துர்க்காதேவி,
ருத்திர காளி என அட்ட சக்திகள் துணையாகப் படைத்தாள்.இந்த சக்திகள்தான் இந்த பிரபஞ்சத்தில் எண்ணிலடங்கா அற்புத செயல்களைச் செய்கின்றன.

எல்லா உயிர்களுக்கும் ஓங்கார பிரணவம் எப்படி அமந்திருக்கின்றதோ,எல்லா அசைவிற்கும் எல்லாத் துடிப்பிற்கும்,எல்லா இயக்கங்களுக்கும் உறைவிடமாக, ஹ்ரீங்கார பிரணவம் அமைந்திருக்கிறதென எல்லா வேதாந்த,சித்தாந்த அருள் நிலைகளும், மகான்களும் முனிவர்களும்,மகரிஷிகளும் கூறியுள்ளனர்.

நமது இந்து சமயம் ஆதிச்சமயம் இந்து வேதம் ஆதிவேதம். அதில் சொல்லாதது ஒன்றுமில்லை.
அது பழமைக்குப் பழமையாயும்,புதுமைக்குப் புதுமையாயும்,விஞ்ஞானத்திற்கு விஞ்ஞானமாயும்,மெய்ஞ்ஞானத்திற்கு மெய்ஞ்ஞானமாயும் நடைமுறைக்கேற்றவாறு அமைந்து இருக்கிறது. அந்த வேதத்தை நன்கு ஆராய்ந்த அனுபவித்த, மாகபண்டிதர்கள், வேதரிஷிகள், சித்தகள் யாவரும் இந்த ஆதிசக்தி இலட்சணங்களைப்பற்றி கூறும் பொழுது,இந்த மகாசக்தி, மூலாதாரத்தில் தீப்பிழம்பாகவும் இருதயத்தில் ஞாயிறு ஒளியாகவும், நெற்றி உச்சியில் பூரண சந்திரனாகவும் காட்சி தருகிறாள்.மேலும்,மந்திரத்தில் மந்திர சக்தியாகவும், குருவில் குரு குருசக்தியாவும்,பிரமத்தில் பிரம சக்தியாவும், விஷ்ணுவில் விஷ்ணு சக்தியாவும்,சிவத்தில் சிவசக்தியாவும், இசையிலும்-நடனத்தில்,பாடலிலும் எல்லா கலைகளிலும் இன்ப வடிவ சக்தியாவும்- மகாசக்தியாவும் அமைந்துள்ளாள்.
இதனை தாயுமானார் :–
எல்லாமுன் அடிமையே எல்லாமுன் உடைமையே
எல்லா முன்னுடைய செயலே
எங்கணும் வியாபி நீயெனச் சொல்லும்
இயல் பென்றிருக்க ஆதி வேத மெல்லாம்.
சர்வ அகிலத்திலும் அறுபத்து நான்கு கலையாய் இருப்பவள் அவளே.அவனன்றி அணுவும் அசையாது என்கிறது அனுபவ உலகம். என்றாலும் அவளன்றி அவன் அசையவே மாட்டான் என்கிறது ஆதிவேதம்.
இச்சக்தியே முச்சக்தியாக வடிவெடுக்கிறாள்.

சதவ குணத்தில் சாந்தமாக பார்வதியாகவும்,இராஜோத குணத்தில் வீரஉருவத்தில் துர்க்கையாகவும்,தமோகுணத்தில் உக்கிர ருத்திர காளியாகவும் விளங்கி உலகு அனைத்து சீவன்களிலும், பல்வேறு துறை-களிலும் பலவாறாக நல்வழிப்படுத்திப் பின் சிவ சன்னதியில் உறைகிறாள். இந்த முச்சக்திகளும் காரண காரியங்களுக்கேற்ப அவ்வடிவங்கள் ஒன்பது சக்தியாக[நவசக்தி] மாறி நவராத்திரி நாயகியாக பூசனை செய்து அருள்பெற்று மகிழ்கிறோம்.அட்சரங்கள்,ஆதி ஒலி எழுத்துக்கள் ஐம்பத்தொன்று.எனவே அம்பாளுக்கு ஐம்பத்தொரு பீடங்களை உண்டாகினார்கள். அவற்றுள் இன்றும் சிறந்து இருப்பது காமரூபம், காசி,நேபாளம், கேதாரம்,உஜ்ஜயினி,பிரயாகை, காமகோடி. இவைகள் பேரருள்மிக்க ஏழு சக்தி பீடங்களாக இருக்கின்றன.

எனவே இப்பிரபஞ்சத்தாருக்கு பயம்,நயம் என்னும் இருவிதத்திலும் ஓயாது அருள் பாலிக்கும் மகா சக்தி கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கிறாள்.இவளை வணங்குவோர் இரக்கமும் நயமும்,நலமும்,நற்சிந்தையும், அறச்சார்பும் பெற்று விளங்குவார்கள்.உண்மை மனத்தோடு தாயை வணங்கினால் ”தாயறியும் கன்றின் நிலை” என்று நிலையும் நாம் பெறலாம்.”வேண்டத்தக்கது எதுவோ நீ அறிவாய்’’

மெய்யன்பர்களிடம் அவர்களின் மனத்தகத்தே இருந்து நன்னோக்கம், நல்லுணர்வு தன்மைகளை எழுப்புகிறாள். அன்பர்கள் அதை சூழ்ந்து ஆழச் சிந்திக்கிறார்கள். அவர்கள் எண்ணத்தில் உருவெழச் செய்கிறாள்.அதைப் பிடித்துக்கொண்டு அவ்வுருவினை வெளிக்கொணர அன்பர்கள் படாது பாடுபடுகிறார்கள். இடையில் இந்த நவீன உலகத்தில் பல இடைபாடுகள்,இடையூறுகளுக்கு ஆட்படுகிறார்கள்.
அவற்றைத் தமது அருளால் நீக்குயருள்கிறாள்.அவர்கள் எண்ணியபடி எண்ணம் நிறைவேறுகிறது.அன்பர்கள் யாவரும் மன மகிழ்கிறார்கள்.

அம்பாளின் வேத வடிவங்கள்

ஆதி சக்தியான அம்மையின் வடிவம்

முதற்முதற் கடவுளாகிய பரம்பொருளின் அருள் ஆற்றலே சக்தியென வழங்கப்பெறுவது.
அவற்றுள்ளும் அம்மையாகக் கருதி வழிபடுவது முற்பட்டது.

பிரபஞ்ச சக்திகளில் நான்குவித சக்திகள் இணைந்து இவ்வுலகத்தையே படைத்துள்ளது. இச்சக்திகளுள் முன்னோடியாக விளங்குவது ஆதி பராசக்திதான்.ஆதி பராசக்தியின் மூலமே பிரம்மதேவன்,மகாவிஷ்ணு,மகேஸ்வரன், சக்தி உட்பட நான்கு மகாசக்திகளாயினார். இந்த நால்வர்களையே சதுர்வேதங்கள் என்றும் குறிப்பிடலாம். இவர்களே சதுர் வர்ணகளும் ஆவர்.

ToTop