ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

தசரா

தசம் என்றால் பத்து தசரா என்றால் பத்து நாள்கள் கொண்டாடக்கூடிய விழா. இவ்விழாபுரட்டாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது. பொதுவாகப் புரட்டாசி மாதம் பெண் தெய்வங்களின் வழிபாட்டுக்குரிய மாதமாகும். ஐப்பசி அஷ்டமி துர்காஷ்டமியாகவும், நவமி ஆயுத பூஜையாகவும், தசமி விஜயதசமியாகவும், ஐப்பசி மாத அமாவாசை தீபாவளிப் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.வளர்பிறை திதியில் இந்த அஷ்டமி, நவமி, தசமி மூன்றும் முக்கியமானவை. இந்த சமயத்தில்
10 நாட்களுக்கு தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் கொண்டாடப்படுகிற
இப் பண்டிகையின் கடைசி மூன்று நாள்கள் அதாவது அஷ்டமி, நவமி, தசமி மிக மிக முக்கிய நாட்களாகும்.

அஷ்டம் என்றால் எட்டு. துர்க்காய அஷ்டமி என்றால் துர்க்கை அம்மனை வழிபடுகிறவர்கள் துர்காய
அஷ்டமி அன்று துர்க்கை அம்மன் எல்லாவிதமான தீய சக்திகளையும் அழிப்பதாக நம்புகிறார்கள்.

நவமி. நவம் என்றால் ஒன்பது. எல்லாவிதமான தொழிற்கருவிகளுக்கும், ஆயுதங்களுக்கும் உகந்த நாள் என்பதால் அன்று ஆ யுதங்களைக் கடவுள் முன் வைத்துப் பூஜை செய்து யுத பூஜையாகக் கொண்டாடப்படுகிறது.

தசமி. தசம் என்றால் பத்து. இது விஜயதசமி அதாவது வளர்பிறை தசமி இது பலவித வெற்றிகளைத்
தரக்கூடிய நாளாகும். பொதுவாக அஷ்டமி, நவமி, தசமியில் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு யோசிப்பவர்கள் இந்த ஐப்பசி மாதம் வளர்பிறை நாள்களில் வரும் இந்த மூன்று நாள்களை மட்டும்
சிறந்த நாளாகக் கருதுகிறார்கள். இந்த பத்தாம் நாளான தசமி அன்று எல்லாவிதமான பெண் தெய்வங்களின் அம்சங்கள் அனைத்தும் ஒன்றுகூடி ஒரே அம்பாளாகக் காட்சி அளிக்கிறது. இந்த நாள் சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளை வியாபாரம் தொடங்குவதற்கும், அலுவலகங்களில் புதுக்கணக்கு தொடங்குவதற்கும் உகந்ததாகக் கருதுகிறார்கள். இந்தப் பத்தாவது நாள் விழா அகில இந்திய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இதில் கல்கத்தாவில் காளிகோவில் வழிபாடு மிக மிக விசேஷம். இங்கு அஷ்டமி, நவமி, தசமி
இவைகளுக்கு ஏழு நாள்களுக்கு முன்னதாகவே இவ்விழா ஆ ரம்பித்து விடுகிறது. இருப்பினும்
இந்தக் கடைசி மூன்று நாள்களும் முக்கியமான நாள்களாகும். மூன்று நாள்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு பெரிய பெரிய பந்தல்கள், தோரணங்கள், வாணவேடிக்கைகள், அம்மன் புறப்பாடு , இரவு கச்சேரி என்று கோலாகாலமாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும், வங்காளம்தேசம், மைசூரிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இதில் மைசூரில் மிக சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். மைசூர் மகராஜாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் பத்து நாள்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு பத்து நாள்களுமே அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு, மஹாராஜாவே முன்னின்று நடத்துவதால் மக்கள் கூட்டம் பெரிய அளவில் கூடி அம்மன் புறப்பாடு , கச்சேரி, ஆட்டம் பாட்டத்தோடு கொண்டாடி மகிழ்கிறார்கள்.

ஒரு காலத்தில் மைசூருக்கு இணையாகத் தமிழ்நாட்டில் உள்ள பாளையங்கோட்டையிலும் அதனருகில் உள்ள குணசேகரப்பட்டினத்திலும் புகழ்பெற்ற விழாவாக, லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மகிழ்கிற விழாவாகக் கொண்டாடப்பட்டது. தற்போது, அதன் வேகம் குறைந்து சாதாரண ஆ யுத பூஜையாகவே கொண்டாடப்படுகிறது.

தேவிக்கு மிகவும் விருப்பமானது நவராத்திரிப் பெருவிழா ஒன்றுதான். இவ்விழா வழிபாட்டில் அனைத்துமே தேவி மயம்தான். அன்னையானவள் எல்லா உயிர்களிடத்திலும் அன்பும், கருணையும் உடையவள். இதை உலகுக்கு உணர்த்தவே இந்த நவராத்திரி வழிபாடு.

இந்த வழிபாட்டினை சிலர் ஒன்பது நாளும் பகல் நேரத்தில் செய்வார்கள். வேறு சிலரோ இரவு
நேரங்களில் மட்டும் அன்னையைப் பூஜிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் சாரதா நவராத்திரி மிக விசேஷமானது. நவராத்திரி ஒன்பது நாட்களும் பகலில் தேவி பாகவதத்தினைப் பாராயணம் செய்தல் நல்லது. மாலையில் விளக்கேற்றி வைத்து அம்மனைக் குறித்த பாடல்கள் பாடுவதும் நன்மையை உண்டாக்கும்.

நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான கலவை சாதம், ஒன்பது விதமான பூ வகைகள், ஒன்பது வித பட்சணங்கள், ஒன்பது கன்னிப் பெண்களுக்கு மங்கல திரவியங்கள், ஆடை, அணிமணிகள் கொடுப்பதும் கூட வழக்கம்தான்.

அன்னைக்கு உகந்த பழங்கள்:

மா, பலா, வாழை, கொய்யா, நாவல், நாரணம், மாதுளை, பேரீச்சை, இளநீர் போன்றவை

நிவேதனப் பொருள்கள்:

சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், வெண்பொங்கல், பலவிதமான காய்கறிகளுடன் கூடிய
சாம்பார்சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை ஆ கியவை.

விசேஷமான சக்தி பீடங்கள் 9

பார்வதியின் தந்தை தட்சன் நடத்திய யாகத்துக்கு சிவனை அழைக்கவில்லை. அவனுக்குத் தர வேண்டிய அவிர் பாகத்தையும் தரவில்லை என்பதால் கோபம் கொண்ட பார்வதி, கணவனின் சொல்லை மீறி தட்சன் யாகம் நடத்தும் இடத்துக்கு நியாயம் கேட்கச் செல்லுகிறாள். தட்சனோ மகளென்றும் பாராமல் பார்வதியை அவமதிக்கிறான். அதனால், வெகுண்ட பார்வதி, யாக குண்டத்தில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.

உக்கிர மூர்த்தியான சிவனோ, இறந்து போன சதி பார்வதியின் உடலை எடுத்துக் கொண்டு
மூவுலகங்களையும் அதி உக்கிரத்துடன் ஆ டச் செய்தார். அந்த நேரத்தில் மகா விஷ்ணு, கோபத்தின் வயப்பட்டு ஆ டும் சிவபெருமானின் கரங்களிலிருந்த பார்வதிதேவியின் சவத்தைத் தன் சக்ராயுதத்தால் பல துண்டங்களாக்கி பல திசைகளிலும் வீசி எறிந்தார்.

அவ்விதமாக உடலின் துண்டுகள் விழுந்த இடங்களை சக்தி பீடங்கள் என்கிறோம்.
சக்தி பீடங்கள் மொத்தம் 51.

அவற்றுள் முக்கியமானவை ஒன்பது.

1. சிறீ நைனா தேவி – இமயமலைப் பகுதியில் சதியின் இரு கண்கள் விழுந்த இடம்.

2. சிறீ சிந்த்த பூர்ணா தேவி – பாதங்களின் சில பாகங்கள் விழுந்த இடம்.

3. சிறீ ஜ்வாலாமுகி – நாக்கு விழுந்த இடம். ஜ்வாலாமுகி சன்னிதியில் அம்மனுக்கு விக்ரகம் எதுவும் கிடையாது.
இங்கு ஜோதி வடிவாக அம்பாள் காட்சி தருகிறாள்.

4. சிறீ வஜ்ரேஷ்வரி – மார்பகங்கள் விழுந்த இடம்.

5. சிறீ வைஷ்ணோ தேவி – சதியின் ஒரு புஜம் விழுந்த இடம்.

6. சிறீ சாமுண்டா தேவி – இங்கு சதியின் உடல் பகுதி எதுவும் விழவில்லை. ஆனால், அன்னை சண்ட, முண்ட அசுரர்களை வதம் செய்த இடம் என்பதால் இரட்டிப்பு சக்தி வாய்ந்த மிகவும் உக்கிரமான தலம்.

7. சிறீ மானஸா தேவி – சதியின் தலை விழுந்த இடம்.

8. சிறீ ஷாகும்பரி தேவி – தலையின் நெற்றிப்பகுதி விழுந்த இடம்.

9. சிறீ காலிகாஜி – சதியின் கூந்தல் விழுந்த இடம். இதனை சக்தி பீடமாக எடுத்துக் கொள்வதில்லை
என்றாலும், மிகப் புனிதமான மகா சக்தி வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது.

ToTop