ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

சமய வளர்ச்சிக்கு சமூகம் செய்யும் சாத்தியங்கள்

தர்மம் , சத்தியம் நமக்கு இருக்குமானால் சமயத்தில், பல சாத்தியங்களை உண்டாக்கலாம் ; உருவாக்கலாம் ; சாதனை புரியலாம்.

ஒரு துறையில் மட்டுமல்ல ; பல துறைகளில் , நாம் நமது ஒன்றுமையைக்
கட்டிக் காக்கலாம். கல்வி , கலாச்சாரம் , பாரம்பரிய சம்பிரதாங்களையும் போற்றிப் பேணலாம். இதனால் எண்ணியவைகளைக் கனவாகாமல் முடிக்கலாம். இதனால் திண்ணியவராகப் பெறலாம்.” இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் ” என்பது நாட்டின் அறக்கோட்பாடுகளில் தலையாயனது.

” சமூகம் ” சிறுபான்மையினர் எனினும் அவரவர் சமய வழிபாட்டுக்குச் சுகந்திரம் உண்டு. மரபுடன் சமரச சன்மார்க்கம் கண்ட பரம்பரை நம் இந்திய சமூகம். ”சநாதன தர்மம் ” என்ற சிறப்பும் இந்து சமயத்திற்கு உண்டு.

” சிறப்புக்குரிய ” சிறிய சமூகத்திற்க்கு உள்ள சமயச் சிறப்புக்கு இந்துக்கள் ஆற்றும் ஆற்றக் கூடிய சாத்தியம் என்ன ? இளையர்களை எப்படி இணைக்கலாம் அவர்களை சமயத்தின் பால் ஆர்வம் கொள்ளவது எப்படி ? இதனை காலத்தையட்டிச் சிந்திக்க வேண்டும்.

காலமெல்லாம் என்ற கேள்விக் குறியில் நில்லாது அல்லது இல்லாது சமயம்
காத்து , நம்மையும் காத்து , நடப்பில் காலத்தையும் கணித்து வாழத்தெரியக்
கூடிய நடைமுறைச் சாத்தியங்களைச் சமயத்தின் வளர்ச்சி வழியில்
காணவேண்டும் என்பதே நமது அவா !

பேதங்களை அகற்றி , இந்து சமய வழியில் யாவரும் ஒன்றிணையலாம். இணைய வைக்க ‘” மார்க்கம் ” உண்டு. அதற்கு மனம் வேண்டும். மனம் , சமய மணம் பரப்ப , விரிய வேண்டும். விரிவில் ‘ விரிசல் ‘ ஏற்படா¡து, மேல் – கீழ் பார்க்காது , ஊனக் கண்ணை நீக்க வேண்டும் ; ஞானக் கண்ணைத் திறக்கச் சமய ஞானம் ஒளி பெற வேண்டும். இதற்கு ” அடிப்படைச் சமய ஞானம் ” என்ன என்பதை , இளமையிலிருந்தே ஊட்டப்பவும் வேண்டும்.

நம் சமயத்தில் நடிப்பு , நடப்பாகலாகாது.

ஆலயங்கள் , மன்றங்கள் யாவும் ஒன்று கூடி , ஒரு குடையின் கீழ்
நின்று செயல்களை தீட்டிச் செம்மையாகச் செய்ய வேண்டும். சக்திகளைக் கணித்து அறிந்து, நம்மை நாமே மறு விமர்சனம் செய்து , எதிர்காலத்தில் வலிவு தரும் செயல் பாடுகளை ராயவேண்டும்.

படித்தவர்களும் பாமரர்களும் , மாணவர்களும், இளையர்களும்
சமய உணர்வில் ஒன்றிக்கும் சாத்தியக் கூறுகளையும் அறிய வேண்டும். நம் காலத்துடன் சமயம் போய்விடா¡து ; இளைய சந்ததிகளுக்கும் அதனைச் சிறப்புச் சொத்தா¡க விட்டு வைக்க வேண்டும். பயனுடைய சிறு அளவு செயல் ஆனாலும் எதிர்காலத்தில் அது விருச்சமாக விரியும். நாம் எதனைச் செய்தல் சாலும் என்பதை ஓர்தல் அவசியமாகிறது. பயனுடைய சொல்லைச் சொல்லுக ; செயலின் சிறு அளவிலேனும் கொள்ளுக என்பதை வேதமாக பெறலும் வேண்டும்.

இங்குள்ள இந்து சமயத்தின் செயல் திறங்களை ஒன்று படுத்த, அதன் அடிப்படைகளைச் சரியான தளத்துடன் பேணப்பவேண்டும்.

சமயம் நம் வாழ்க்கைக்கு அடிப்படை. மனப்பக்குவத்தை, அதற்கு மேல் வைக்கவேண்டும். குழம்பிய மனப்பான்மையில் சமயத்தை அணுகலாது. நம் சிறார்களுக்கு சமயத்தின் மேன்மை , உயர்வு, விஞ்ஞானத்தோடு இயைந்த சிறப்பு தன்மை , அடிப்படை இயல்பு தன்மை போதாதது. அல்லது அறவே இல்லை ! என்றும் கூறலாம். வீண் சர்ச்சைகளால் பயனில்லை. சமய ஞானம்
உள்ளவர்கள் நம் சமூகத்திற்கு இதில் வழிகாட்டவேண்டும்.

ஒரு இந்துவின் சமய வாழ்க்கைக்கு ஆலயம் அடிப்படை. வீட்டிலும்
வணங்கலாம். ஆனால், ஆலயம் சென்று , ஆகம முறைப்படி வணங்குவதென்பது எதனால் என்பதை உணர்ந்து காரிய மாற்று செய்ய வேண்டும்.

பிற சமயங்கள் , தாங்கள் வழிப்படும் ஆலயம் அல்லது தேவாலாயம், பள்ளிவாசல் , பெளத்த விகாரங்களின் வழி , தங்களைச் செம்மைப்படுத்திக் கொள்ளவதைக் காணலாம். அந்த சாத்தியம் நமக்கும் உண்டு. ஆனால் நாம் அதனை
செம்மையாக செயல்படுவதில்லை. நமது சமயத்தின் சாரத்தை ,
பெருமையை, கீர்த்தியினை அறிந்து மற்றவர்களுக்கும் எடுத்து இயம்ப வேண்டும்.

சாதாரணமாக நான் எல்லா இடங்களிலும் , நாடுகளிலும் இதனைக் காண்கிறேன். ஒரு சாதாரண இந்து குழப்புகிறான்.

இமயத்திலிருந்துக் கொண்டு , மடுவில் நிற்பவனைப் பார்த்து , என்னைப்போல் நீயும் உச்சிக்கு வா என்று வாயளவில் சொல்லாது , உச்சியிருப்பவர்கள் இறங்கி வந்து , தான் பெற்ற சமய இன்பத்தை அந்த பாமர இந்துக்கு காட்டி , உச்சிக்கு அழைத்துச் செல்லுதல் வேண்டும். அதுவே தர்மமாகும்.

ஞானச்சுடரை ஏற்றக்கூடிய மையத்தைக் காட்டவேண்டும். இந்து
சமயத் தத்துவத்தைப் படிப்படியாகப் படியும் வகையிலும் , புரியும் வகையிலும் , வகையும் தொகையும், நிலையும் நினைப்பையும் தெரிந்து , கொஞ்சம் கொஞ்சமாக ஞானத்தீபத்தினை ஏற்றப் பழக்க , பழக வேண்டும் – சமயம் தெரிந்தவர்கள் – சான்றோரகள்.

சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், தென் ஆப்பிரிக்கா [டர்பன்]
ஆகிய நாடுகளில் சில ஆலயங்களிலும் , மற்றும் சிலர் தனிபட்டவர்களும், நல்லவர்களும் வல்லவர்களும் ஆங்காங்கு ஆசிரியர்மார்களும் சிறார்களுக்கும் – சமய பேதனை செய்வதுடன் , மறவாது தமிழினையும் கற்று தருவதைக் காண்கிறேன். இந்த மனப்பக்குவத்தால் நாம் ஒன்றி இணையலாம்.

இந்த மாற்றத்தினால் நம்மிடமும் பலம் உண்டு என்பதை அறியலாம்.
எல்லா நாட்டிலும் மாற்றங்கள் மிக விரைவாக நடைபெறுகிறது. இதனை உணர்ந்து நம் சமய வழிபாட்டிலும் கமத்தின் அச்சாணிக்கு ஊறு ஏற்படாவண்ணம் ஒன்றிணைந்து செயல்படும் வழிமுறைகளை ராயவேண்டும்.

இந்து தர்ம வாழ்வு , அவர்களுடைய வழிபாட்டில் முடியக் கூடியதல்ல ;
ஆத்மவுடன் , அதை வளர்க்கக் கூடிய கல்விக்கும் , அதனைச் சார்ந்த கலைக்கும் கலாச்சாரப் பண்பாட்டிற்கும் , சிந்தனைக்கும் ஏன் பொருளாதாரச் சிந்தைனைக்கும் வாழ வழி காட்டும் அகிம்சா சிந்தைனைக்கும் கூட தேவையானதா¡கும்.
இதனை நம் இளையர்கள் சிந்திக்க வேண்டும்.

இந்த வழிகளில் இந்து சமயத்தை அடி வேரிலிருந்து , நுனிக்கிளையிலுள்ள தளிர் வரைக்கும் இதன் சத்து பரவியிருக்கப் பார்த்துக் கொண்டால் , சமயம் காலவோட்டத்தில் அசைக்க முடியாத ஆணிவேரைப் பசுமையுடன் ஊன்றிவிடும் நம்பிக்கை உண்டு.
நாடெங்கிலும் சமய சொற்பொழிவுகளை நடத்தலாம் ; கருத்தரங்குகூட்டலாம் ; சமய விழாக்களை நடத்தலாம்.இன்னும் மனமிருந்தால் எவ்வளவோ செய்யலாம். சிறுபான்மையோராக இருக்கும் நமக்கு – நமக்களிக்கப்பட்டிருக்கும்
சமய வழிபாட்டுக்குரிய உரிமையைப் பயன் படுத்திக் கொண்டால்,
பயன் படுத்திக்கொள்ளுவதில்தான் எல்லாச் சிறப்பும் உண்டு.

அதற்கு அடிப்படை போடுங்கள். சமயத்தின் வளர்ச்சிக்குச் சமூகம் செய்யக் கூடிய சாத்தியங்களை தொடங்குங்கள்.

ToTop