ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

உருத்திராட்சம்

“அக்கம் akkam, பெ.(n) வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, குரால் (கபிலம் brown)
என்னும் நிறங்களால் ஐவகைப் பட்டதும், ஒன்று முதல் பதினாறு வரை முள்முனைகள் கொண்டதும், ஒருவகைச் சிறப்பான மருத்துவ ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுவதும், குமரி நாட்டுக் காலந் தொட்டுச் சிவ நெறித் தமிழரால் “அணியப்பட்டுவருவதும், பனிமலை அடிவார நேபாள நாட்டில் இயற்கையாக விளைவதும், அக்கமணி என்று பெயர் வழங்கியதும், ஆரியர் தென்னாடு வந்தபின் உருத்திராக்கம் (ருத்ரா‡) எனப் பெயர் மாறியதுமான காய்மணி;Rudraksa bead, a Nepalese A product, of five different colours, having one to sixteen pointed projections over the surface, considered to possess some rare medical properties, and customerily worn by the Tamilian Saivaites from Lemurian or pre-historic times

“தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்” (திருப்புகழ் 475). அக்கு பார்க்க; see akku

அள்= கூர்மை (திவா). அள் –> அள்கு –> அ·கு.
வெள் –> வெள்கு –>வெ·கு = விரும்பு,
மிக விரும்பு, பிறர் பொருளை விரும்பு.

அ·கு –> அக்கு = கூர்மை, முனை, முள்முனை, முள்முனையுள்ள அக்க மணி.
“உருப்புலக்கை அணிந்தவர் ” (திருவானைக் கோச் செங். 4)
அக்கு –> அக்கம் = பெரிய அக்கமணி, ‘அம்’ பெருமைப் பொருட் பின்னொட்டு.
விளக்கு –> (கலங்கரை) விளக்கம்.

கடவுண்மணி, சிவமணி, தெய்வமணி, நாயகமணி, கண்மணி, கண்டம், கண்டி,
கண்டிகை, முண்மணி என்பன
அக்கமணியின் மறுபெயர்கள். இவற்றுள் முதல் நான்கொழிந்த ஏனைய வெல்லாம்,
அக்கு அல்லது அக்கம் என்னும் பெயரைப் போன்று, கூர்முனைகளைக் கொண்டதென்றே
பொருள் படுவன. முண்மணி என்பது வெளிப்படை.

கடவுளையே ஒருசார் தமிழர் சிவன் என்னும் பெயரால் வழிபடுவதால், ‘கடவுண்மணி’ முதலிய நாற்பெயரும் ஒருபொருட் சொற்களே.

கடவுள் மணி, முள் மணி என்பன கடவுண்மணி. முண்மணி என்று புணர்ந்தது போன்றே,
கள் மணி என்பதும் கண்மணிஎன்று புணரும்.

குள் –> கள் = முள். கள் –> கள்ளி = முள்ளுள்ள செடி.
முள் –> முள்ளி,(நீர்)முள்ளி.
குள் –> குளவி = கொட்டும் முள்ளுள்ளது.
குள்ளுதல் = கிள்ளுதல் (நெல்லை வழக்கு).
குள் –> கிள் –> கிள்ளி –>கிளி =கூரிய மூக்கினாற் கிள்ளூவது.

கள் –> கண்டு = கண்டங்கத்திரி (முட்கத்திரி).
கண்டு –> கண்டம் = கள்ளி, கண்டங்கத்திரி, எழுத்தாணி.
கண்டு –>கண்டல் = முள்ளி, நீர்முள்ளி, தாழை.
கண்டு –> கண்டகம் = முள், நீர்முள்ளி, வாள்.
கண்டல் –>கண்டலம் = முள்ளி.
கண்டகம் –> கண்டகி = முள்ளுள்ள தாழை, இலந்தை, மூங்கில், முதுகெலும்பு.
கண்டு –> கண்டி = முனைகளுள்ள உருத்திராக்கம்.
கண்டி –> கண்டிகை = உருத்திராக்க மாலை.

சிவன் சிவமாகி வடமொழியால் சைவமானது போல், விண்ணவனை அடையாளங் காண
வைணவத்திலிருந்து தலை கீழாகப் போக வேண்டும்.

தமிழில் இருந்து வடமொழிக்குப் போன வழி:

விண்ணவன் = விண்ணு –> விஷ்ணு – வைஷ்ணவம் – வைணவம்.
இதனால் தான் ஆழ்வார்களால் விண்ணகரம் என்ற சொல்லை பெருமாள் கோயிலுக்குப்
பயன்படுத்துவதைப் பார்க்கிறோம்.

உண்ணம் –> உஷ்ணம் (இதிலும் தலை கீழாக நாம் புரிந்து வைத்திருக்கிறோம்.) உண்ணம்தான் முதல்; உஷ்ணம் அல்ல. உண்ணம் என்பதோடு பொருளால் தொடர்பு கொண்ட பல தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன

இற்றைத் தமிழர்க்குப் பொதுவாக மதத் துறையிற் பகுத்தறிவின்மையால், கண்மணி யென்பது சிவன் கண்ணினின்று தோன்றிய மணியே என்றும், அக்கம் என்பது அ‡ என்னும் வடசொற் திரிபே யென்றும், ஆரியப் புராணப் புரட்டையெல்லாம் முழுவுண்மை யென்றும், அதை ஆரய்தல் இறைவனுக்கு மாறான அறங்கடை (பாவம்) என்றும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஆரியவேதக் காற்றுத் தெய்வமாகிய உருத்திரனுக்கும் சிவனுக்கும் யாதொரு தொடர்புமில்லை.
மங்கலம் என்று பொருள்படும் சிவ என்னும் ஆரிய அடைமொழி இந்திரன், அக்கினி, உருத்திரன்
என்னும் ஆரிய வேத முச்சிறு தெய்வங்கட்கும் பொதுவாக வழங்கப் பட்டுள்ளது. அதற்குச் சிவந்தவன்
என்று பொருள் படும் சிவன் என்னும் செந்தமிழ்ப் பெயர்ச் சொல்லொடு எள்ளளவுந் தொடர்பில்லை.
அந்திவண்ணன், அழல்வண்ணன், செம்மேனியன், மாணிக்கக் கூத்தன் முதலிய சிவன் பெயர்களை நோக்குக.

சிவநெறி குமரி நாட்டிலேயே தோன்றி வளர்ச்சியடைந்து விட்ட தூய தமிழ் மதமாதலாலும்,
அக்கமணி மேனாடுகளில் விளையாமையாலும், கிரேக்கத்திற்கு இனமான ஒரு மொழியைப்
பேசிக் கொண்டிருந்த மேலையாசிய ஆரிய வகுப்பார் இந்தியாவிற்குட் புகு முன்னரே,
தமிழர் இந்தியா முழுதும் பரவி வட இந்தியத் தமிழர் முன்பு திராவிடராயும், பின்பு பிராகிருதராயும்
மாறியதனாலும், அக்கமணியைச் சிவனியர் குமரி நாட்டுக் காலந்தொட்டு அணிந்து வந்ததனாலும்,
அம்மணிக்கு அப்பெயரே உலக வழக்கில் வழங்கியதனாலும், தமிழ் முறைப் படி முண்மணி என்பதே
அப் பெயர்ப் பொருளாம்.

அக்கு –
ak, to be sharp, to pierce, Gk. ak – ros, pointed, ak – one, whetstone,
ak-me, edge. L., ac-us, needle, ac-uere, to sharpen,
ac-ies, edge, acumen – anything sharp, AS , ecg, edge, E., acute, sharp,
pointed, f.L., acutus, past participle of acuere
Fr., aigu, acute.

அக்கு என்பதே முதன்முதல் தோன்றிய இயற்கையான பெயர் .
அது ‘அம்’ என்னும் பெருமைப்பொருட் பின்னொட்டுப் பெற்று அக்கம் என்றானது.
முத்து –> முத்தம் (பருமுத்து) அக்கம் = பருத்த சிவ மணி.

ஆரியர் – திராவிடச் சிக்கலைத் தவிர்க்கலாம் எனிலும் சில உண்மைகளை
மறுக்க இயலாதிருக்கிறது. பாவாணர் கொஞ்சம் வேகமானவர்.

” சைவரக்குரிய சிவ சின்னங்கள் மூன்றில் ஒன்று உத்திராட்சம்;
மற்றவை திருநீறும் ; திருவைதெழுத்தும்.”

முக்கண்ணன் சிவபெருமான் கண்ணிலிருந்தது உதிர்ந்த நீர்தான் உத்திராட்சம். அவர் கண்களிலிருந்து உதிர்ந்த நீரில் கண்டிமரம் தோன்றியது. சிவப் பிழப்பாக நெருப்புக் கண்ணிலிருந்து கரிய உருவக் கண்டி தோன்றின. “உருத்திரன் கண்ணீரில் உதித்தால் உத்திராக்கம் – உத்திராட்சம்” என்று பெயர் பெற்றது.

சாமியார்களைப் பற்றி ஒரு அடையாளம் காட்டும்போது ” நெற்றியில்
பட்டை” , “காவிச் சட்டை” , “கழுத்தில் கொட்டை “என்று வேடிக்கையாகவும்
சில சமயங்களில் வினையாகவும் சொல்லவதுண்டு.

உருத்திராட்சம் இதற்கு முன் அறியாதவர்கள் கூட அருணாச்சலம்
திரைப்படம் மூலம் பலர் தெரிந்திருப்பார்கள்.

இது வெறும் நாகரீகத்திற்காக அணிகிற விஷயமில்லை. உத்திராட்சம்
ஓர் அபூர்வமான மூலிகைப் பொருள் என்பது ஆய்ச்சியாளர்களால் ஒப்புக்
கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும்.

மன அழுத்தம் குறைய , மன உளைச்சல் நீங்க, இரத்த அழுத்தம்
குறைய ,நோய்கள் நீங்க இந்த உருத்திராடச மாலை அணிவது நல்லது.
தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்துப் படுத்தால் ஆழ்ந்த தூக்கம் கொள்ளலாம்

38 வகையான உத்திராட்சத்தில் , 21 வகை மிக பிரசித்தம். முகத்தைப்
பொறுத்தே ஒரு முகம், இரு முகம் என்று வருசைப் படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு முகத்திற்கும் பலன் உண்டு.

[ ஒருமுகம் உருத்திராட்சம் கிடைப்பது மிக அபூர்வம். நான் நேப்பாளம் சென்றிருந்த போது ஒரு முக உத்திராட்சம் முதல் பதினாறு முகம் கொண்ட உத்திராட்சம் கண்டேன். இதில் ஒரு முக உத்திராட்சம் [சிறியது] மூன்று இலட்சம் நேப்பாள ரூபாய் வரை
விலை சொல்லப்பட்டது.]

ஒரு முகம் கிடைக்கப் பெற்றவர்கள் தங்க பூண் போட்டு பத்திரப்
படுத்தியிருப்பார்கள். பல தலைமுறையாக காத்து வைத்திருப்பார்கள். அதை
வைத்திருந்தால் குடும்பத்தில் சகல சம்பத்துக்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சில குழந்தைகள் 3 – 4 வயது வரை பேசாது இருப்பார்கள் அல்லது
சரிவர சொற்கள் வராது இருப்பார்கள். அந்த மாதிரி குழந்தைகளுக்கு
இந்த உத்திராட்ச மணியினை 48 நாட்கள் உராய்த்து நாவில்
தடவி வந்தால் சரியான பேச்சு வரும் [ அனுபவ உண்மை]

ஒரு முகம் [ ஏகமுக] உத்திராட்ச சிவன் என்பர். இதனை அணிந்தால்
பிரம்ம வாதன பாவம் நீங்கும் என்பார்கள்.

இருமுக உத்திராட்சத்தினை சிவ சக்தி – கவுரி சங்கர் என்றும்
சொல்வார்கள். இரு முக உத்திராட்சம் , மந்திரதந்திர சக்தி கொடுக்கும்-
கொலைப் பாவம் போம்.

மும்முகம் அனலைக் குறிக்கும். வினை தீரும், அதிர்ஷ்டத்தையும்
கொடுக்கும் என்பர்.

நான்முகம் அதிதெய்வம். பாவம் தீரும் , எதிர்பாலிரை ஈர்க்க உதவும்.
ஐம்முகம் தீங்கு தீரும், பிரச்சனைக்கும் தீர்வு காணும்.

ஆறுமுக உருத்திராட்சத்திற்க்கு அதிபதி ஆறுமுகனே. பிரவதை பாவ
நிவர்த்தியையும் கொடுக்கும்.

ஏழு முக உருத்திராட்சத்திற்கு ஈசன் நாகேசன் ; அபாயத்திலிருந்து காக்கும்.

எட்டு முக உருத்திராட்சத்திற்க்கு உரியவர் விநாயகர்; திருட்டுக் குற்ற பாவம் தீரும்.

ஒன்பது முக உருத்திராட்சத்திற்க்கும் தெய்வம் வயிரவன்; இதை அணிந்தால்
கொலைப் பாவம் தீரும்.

பத்து முகத்திற்கு பதி அரி ; இதனை அணியின் பேய் அஞ்சி நீங்கும். பதினொன்று
[ ஏகாதாச ] இறை உருத்திரர் ; இதை பூண்டவர்க்கு விக்கினம் நீங்கும்.

பன்னிரு முழ்கத்திற்க்கு தேவர் தித்தர் ; ஊறுங்கள் போம் எண்ணங்கள் நிறைவேறும்.

பதின் மூன்று முக உத்திராட்சத்திற்கு தெய்வம் பரமசிவன்; இதனை தலையில்
அணிந்தால் முக்தி உண்டு

பதினாங்கு முக உத்திராட்சம் ருத்ர நேத்திரத்திலிருந்து உண்டானது.
இதை அணிந்தால் எல்லா வியாதிகளும் போய் எப்போதும்

இப்படி ஒவ்வொரு முகத்திற்க்கும் ஒவ்வொரு பலனாக உள்ளது உருத்திராட்சத்தை 3,4,5,6, எண்ணிகையில் வளையமாக கோர்த்து அணிவர்,
கழுத்தில் அணியும் மாலைகள் 27 , 54 , 108 என்ற கணக்கில் இருக்கும்.
கழுத்தில், கையில் அணியும் உத்திராட்சம் அங்·குபங்சர் போல் செயல் பட்டுபயனளிக்க கூடியதாம்.

ஆரம்ப இந்தோஷியாவில் விளைந்த இது இப்போது நேப்பாளத்திலும், ஹரித்துவாரிலும் பயிராகிறது.
நேப்பாளத்தில் பசுபதிநாத் கோயிலில் உத்திராட்ச மரம் ஓரளவு நன்கு வளர்ந்த மரத்தினை பார்த்தேன். ஆனால் காய்கள் இல்லை.

அபூர்வமான இந்த உருத்திராட்சத்துக்கு கிராக்கி அதிகம். இதன் மகிமை உணர்ந்து,
மரத்திலால் செதுக்கிய போலிகளும், அரக்கினால் உருக்கிய போலிகளும் விற்பனையில்
நிறைய உள்ளது. உருத்திராட்சம் வாங்கினால் அது குறித்து அறிந்தோர்,
விபரம் அறிந்தோர் மூலம் வாங்கவும். போலியா , நிஜமா என்று அறிய அதனை தண்ணீர் போடவும்.
மூழ்கினால் அசல், மிதந்தால் நகல் !

மந்திரமும் எண்ணும் :

” ஈசான மந்திரத்தால் சிகையில் நாற்பதும், சிரசில் ஆறும் தரிக்க,

தற்புற மந்திரத்தால் ‘ செவியன்றுக்கு ஆறு வீதம் தரிக்க;

கண்டத்தில் அகோர மந்திரத்தால் 32 தரிக்க;

உரத்தில்[மார்பில்] 49 அணிக;

தோள்களில் 16ம் அணிக ;

மதரத்து 12 ம் அணிக;

பிரசாத மந்திரத்தால் முன்கைக்கு 8 ம்

மார்பில் மாலையாக 108 மணிகளை அணிந்திடுக;

இது செய்வார் கருவுட் புகார். [பிறவாமை பெறுவர்]

விதிமுறைகள் / நியமம்:

உத்திராட்சம் அணிவோர் சில நியமங்களை மேற்கொள்ள வேண்டும்.
உணவில் ஊனைத் தவிர்த்திட வேண்டும்.
உரையாடுவதில் , பேச்சில் இனிமை வேண்டும். கடுமையான
கீழ்தரமான சொற்களை/ வார்த்தைகளை நீக்க வேண்டும்.
மதுவை ஒழித்தல் வேண்டும்.

மணி அளவு:

பெரும்பாலும் இப்போது பலரும் மிகச் சிறிய அளவுடைய மணிகளையே விரும்பி பூணுகிறார்கள்.
ஏனினும் ‘ உத்திராக்க விசிட்டம் ‘ என்னும் நூலில் எந்த அளவு உத்திராட்ச மணி
சிறப்புடையது என்று கூறப் பெற்றுள்ளது.
நெல்லிக்கனி அளவுள்ள மணி உத்தமானது ;
இலந்தைக் கனிஅளவுள்ளது மத்திமம் ;
கடலை அளவுடையது அதமம்.

இதனை பின் வரும் வெண்பா ;

” உத்தமமே மலகத் தின்கனிக்கொப் பானகண்டி ;
மத்திம மாகும் இலந்தை வன்கனிக்கொப்பு
இத்தலத்துள் நீசஞ் சணவித் திணை யென்ன வேநினைக ;
பாசவிதம் பாற்ற நினைப் பார். ”

செபமாலைக்குரிய மணிகள்:

இரண்டு முகமுடையதும் மூன்று முக உடையதும் செபமாலைக்கு உரியதுஅன்று ;
பத்து முகமும் பதின்மூன்று முகமும் பழுதுடையது ; மற்றனைத்தும் உத்தமம்.

இதனை கூறும் பாடல் :

இரண்டுமுகக் கண்டிசெப மாலைக் கிசையாது
இரண்டுடன் ஒன்றும் இசையாது – இரண்டுடனே
பத்துமுக மும்பதின் மூன்றும் பழுது ;
மற்றனைத்தும் உத்தம மாமென்றுணர்.

செபத்துக்குரிய விரல் :

அங்குஷ்டத்தினால் மோட்சமும், தர்ச்சனியால் சத்துரு நாசம்,
மத்திமையால் பொருட்பேறும், அனாமிகையால் சாந்தியும்,
கனிஷ்டையால் இரட்சைணையும் .
[அங்குஷ்ட: கட்டை விரல் ; தர்ச்சனி ள்காட்டி விரல்;
மத்திமை : நடு விரல் ; அனாகிகை : மோதிர விரல் ;
கனிஷ்டை : சுண்டு விரல்.]

செபிக்கும் ஒலி:

செபிக்குங்கால் மானதம் மந்தம் ஒலி என மூன்று விதமுண்டு.
மானதமாக உச்சிப்பது உத்தமம் ;
மானதம் முத்திக்கு ஏது ;
மந்தம் புத்தி சித்திக்கும்;
இழிதொழிலரே ஒலித்து உச்சரிப்பர்.

1008 செபித்தல் உத்தமம்;
அதிற்பாதி மத்திமம்;
108 செபித்தல் அதமம்

“வலது கரத்தில் ஜப மாலை கொண்டு – துணியால் மறைத்துக் கொள்க;
தனாது குருவும் அதனைக் காண்டல் கூடாது ‘ என்பது விதி.
செபிக்கும் காலம் உத்திராட்ச மாலை கைதவறிக் கீழே வீழின், ஜபமாலைக்
கண்ணில் ஒற்றிக் கொண்டு, நன்னீராட்டி, 108 முறை காயத்திரி எண்ணுக;
செபமாலை அறுந்து வீழின் , குறைவற முன்போல் கோவையாக்கி,
முறையே நீராட்டி. அகோரம் ஒரு நூறு உச்சரிக்க.

பொது:

சிவபக்தருக்குக் உத்திராட்ச தானம் செய்வது சிறப்புடையது.
உத்திராட்சம் அணிந்தவரை பணிவதும் சிவ புண்ணியம்.
மேற்கண்டபவைகளை கூறியவை சிதம்பரம் மறையான சம்பந்தர் பாடி
அருளிய ‘ உத்திராக்க விசிட்டம் ” என்னும் வெண்பா நூலில் கண்டனவாகும்.
திருவாடுவடுதுறை தீனம் 1954- ல் வெளியீடு.

அறுபத்து மூன்று நாயன்மார்களூள் ஒருவர் மூர்த்தி நாயனார். அவரைச்
சுந்தரர் திருத்தொண்டர்த் தொகையில் ” மும்மையால் உலகாண்ட
மூர்த்திக்கும் அடியேன் ” என்று துதிப்பர். இதன் பொருள் ” மும்மை ”
என்பது உத்திராட்சம் , ஜடை , திருநீறு .இந்த மூன்றையே உண்மைப்
பொருள் என மதித்து வாழ்ந்தவர் மூர்த்தி நாயனார்.

பல்லவ அரசர்களில் பெரும்பாலோர் சைவ சமயச் சார்பும் பற்றும்
உடையவர்கள். இதனை அவர்கள் இயற்பெயராலும் சிறப்புப் பெயர்களானும்
அறியவரும்.திருநாவுக்கரசரால் சைவம் சார்ந்தவனாகிய மகேந்திரன் மகன் ,
வாதாபி கொண்ட முதலாம் நரசிம்ம வர்மன், காஞ்சிக்கு அண்மையில்
கூரம் என்ற ஊரில் வித்யாவிநீத பல்லவேசுவரக்கிருதம் என்ற சிவாலயத்தை கட்டினான்.
காஞ்சி புரத்தில் கைலாச நாதர் கோயிலை கட்டியவன் இராசசிம்மன் என்னும் பல்லவ அரசனின்
தந்தையாகிய பரமேசுவரவர்மன் மாகபலிபுரத்தில் ‘ கணேசர் ‘ கோவில் என்ற சிவாலாயத்தை அமைத்தவன்.

இக்கோவிலில் பதினொரு வடமொழிச் சுலோங்கள் கல் வெட்டியில் இருக்கிறது. அவை அரசனுக்கும்
சிவனுக்கும் பொருள் பொருந்தும் வண்ணம் சிலோடையாக உள்ளது. அதில் இரண்டாவது ஆறாவது
சுலோங்கள் அவ்வரசன் உருத்திராட்ச மணிகளாலாய சிவலிங்கத்தைத் தலைமுடியாகஅணிந்தவன் என்று அறியவருகிறது. கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில் மேற்கட்டி இருப்பது கண்கூடு ; பெரும்பாலான தலங்களில் பட்டாடையால் அமைக்கப் பெற்றிருக்கும் திருவாரூரில் பூங்கோயிலில்
” முத்து விதானம் ” அமைந்திருந்ததாகத் திருநாவுக்கரசர் கூறுவர்.இங்கு கண்ட முத்து உருத்திராட்ச
மணியாகவும் இருக்கலாம் ஆகவே கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில்
“அமைய வேண்டுவது ‘ உத்திராட்ச விதானம் ‘ இதை உணர்ந்த திருப்பனந்தாள் மட சிறீகாசி வாசி
நந்தித் தம்பிரான் சுவாமிகள் பலசிவ தலங்களில் அமைக்க உதவினார்.
அப்படி அமைந்தவற்றுள் திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் காணலாம்.

[நேப்பாளத்தில்] காட்மண்டில் பதிபதிநாத் கோயிலிலும் காணலாம்.காரைகுடிக்கு அருகில்
இருக்கும் பிள்ளையார் பட்டியிலிருக்கும் விநாயகர் கோயிலில் [உரித்த தேங்காய்] அளவு
உத்திராட்சம் இருப்பதாக பலர் சொல்ல கேட்டுயிருக்கிறேன்

“நெக்குளார்வ மிகப் பெருகி நினைந்தக்கு
மாலை கொண்டங்கை யிலெண்ணுவார்
தக்கவானவராய்த் தகுவிப்பது
நக்க நாம நமச் சிவாயவே ” – சம்பந்தர்.

ToTop