மதங்கள், காலம், காலமாகத் தோற்றும் காவியங்கள்.
இறைவனைப் பற்றி மதங்கள் கூறுவது என்ன?
எங்கு இருப்பவன் இறைவன். நீக்கமற நிறைந்திருப்பவன்.
எல்லாவிடங்களிலும் வியாபித்து இருப்பவன்.
இது மதங்கள் மூலம் நமக்கு தரும் செய்தி.ஒன்றே ஒரு குலம்; ஒருவனே தேவன் என்று பல முறை படித்துள்ளோம்.
அவன் உருவமற்றவன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆளுக்கொரு கடவுள் என்றும்; அது வித்தியாசம் என்றும்;
அது உன் கடவுள்; அது தாழ்ந்தது, இது உயர்ந்தது…. என்ற தெரு சண்டை தினம்.
இன்னும் இந்த வீணான சர்ச்சை…..
மதங்களின் பெயரால் மனிதகுலம் பிரிந்து, சண்டையிட்டுக் கொண்டுயிருக்கிறது
வேதங்களும், பைபிலும், குர்ரானும் கூறுகிறது ஒரே மொழி.
சமயங்களில் கூறுவதை கூர்ந்து பார்த்தால் மாறான கருத்தில்லை.
சைவம் என்றாலும், அல்லா என்றாலும், பிதா என்றாலும் மூலத்தில் ஒன்றுதான்.
உணர்த்துவது ஒன்றுதான்.
விவேகம் இல்லாதவர்கள், புறவேற்றுமை முக்கியம் கொடுக்கிறவர்கள் சிந்திக்கவேண்டும்.
” சாதியிலே, மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச் சந்தடியிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து விணே அழிதல் அழகலவே ”
என்கிறார் வள்ளலார்.
தீயினைக் கும்பிடும் பார்ப்பார் -நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்
கோயிற் சிலுவையின் முன்னே – நின்று
கும்பிடும் யேசு மதத்தார்
யாரும் பணிந்திடும் தெய்வம் – பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் இன்று – இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்
என்ற பாரதியின் வாக்கு நமது பழக்கத்தை மாற்றவேண்டும்.
மதங்களுக்கு இரண்டு முகங்கள்.
ஒன்று : அதன் தத்துவம் சார்ந்தது. அன்பையும் மனித உறவுகளாகவும்
போற்றுகிற ஆன்மீகம் முகம்.
இன்னொன்று : இந்த ஆன்மீகத்தன்மைக் காப்பாற்ற உருவாக்கப்பட்ட
சடங்கு, பூசை, யாகம், பலி என்ற சடங்கு.
மறைந்த ஆன்மீகம் முன் நிற்க வேண்டும்.
ஆனால், சடங்குதான் ஆன்மீகத்தை விழுங்கி விட்டு கோணல் பல சிரிக்கின்றன.