ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

This website will be shut down on July 14th 2022! Thank you for all your support!

மென்பொருள் / செயலிகள்

தமிழ் செயலிகளின் தொகுப்பு

புதிய எழுத்துப்பிழை திருத்தி (வாணி) அறிமுகம்
உங்கள் வாக்கியங்களை வாணியில் கொடுத்து “திருத்துக” பொத்தானை அழுத்தவும், பின்னர் பிழை திருத்தியபிறகு “சம்மதம்” பொத்தானை அழுத்தி, திருத்தங்களைப் பெற்றுக் கொள்ளலாம். சுயதிருத்தம் என்ற தேர்வு பொத்தானைத் தேர்வு செய்யாவிட்டால் இக்கருவி தானாக எந்தப் பிழையையும் திருத்தாது, வெறும் பரிந்துரை மட்டும் வழங்கும். காட்டப்படும் பரிந்துரைப் பட்டியலில் வாணியின் பரிந்துரைகளும், பயனர் அளித்த சொல்லும் இருக்கும். கூடுதலாக பயனர் திருத்திக் கொள்ள எழுத்துப்பெட்டியும் உள்ளது. மேலும் அறிய..

புதிய எழுத்துருமாற்றி ஓவன்
ஓவன் என்றால் ஓவியன் என்று பொருள். சீரற்ற வடிவங்களைச் சீராக்கி வரைவான். உணவைப் பக்குவப்படுத்துவது போல எழுத்துக்களையும் பக்குவப்படுத்தித் தருவான் இந்த ஓவன்.

என்.எச்.எம் எழுதி  (NHM Writer)
ஒருங்குறித்தமிழை உள்ளீடு செய்ய இன்னுமொரு சிறிய செயலி. மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.

எழில்நிலா வலைத்தள யுனிகோட் தமிழ் தட்டெழுதி.
வலைத்தளத்திலிருந்தவாறே ஒருங்குறியில் (யுனிகோட்) தமிழ் தட்டெழுதுவதற்கான ஒரு செயலி.

‘அழகி’ தமிழ் மென்பொருள்
தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப் பயன்பாட்டு மென்பொருள். விண்டோஸின் அனைத்து செயலிகளிலும் நேரடியாகவே தட்டச்சு செய்ய வல்லது – யூனிகோட், திஸ்கி இரண்டிலும் – ஒலியியல், தமிழ்நெட் 99,  தமிழ்’ தட்டச்சு என்ற மூன்று விசைப்பலகை முறைகளிலும். உலகின் முதலாம் ‘இரு திரை’ ஒலிபெயர்ப்பு கருவி கொண்டது.

கூகிள் தமிழ் யுனிகோட் எழுதி
தமிழ் மட்டுமன்றி இன்னும் பல இண்டிக் மொழிகளில் தட்டெழுதக்கூடிய ஒரு தளம்.

தமிழ் 99 விசைப்பலகை தட்டச்சு செயலி
நீங்கள் Tamil 99 Keyboard பயன்படுத்தி யுனிகோட் தமிழ் தட்டச்சு செய்பவர்களாகவிருந்தால் இச்செயலி மூலம் நேரடியாக இணையத்திலேயே தட்டச்சு செய்யலாம்

 

ToTop