
இன்றுடன் (Sep 27, 2019) கூகுள் தொடங்கி 21 ஆண்டுகள் ஆகிறது. இந்த நாளை ஒட்டி கூகுள் பற்றிய 21 சுவாரஸ்ய தகவல்கள்:
கூகுள் உலகத்தின் அதிகம் பார்க்கப்பட்ட இணையதளம் ஆகும். பிங்கில் அதிகம் தேடப்பட்ட இணையதள பக்கம் ஆகும்.
- கூகுள் முதலில் லேரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் என்ற இரண்டு கல்லூரி மாணாவர்களால் தொடங்கப்பட்டது. இணைய தளங்களை தரவரிசைப் படுத்தும் ஒரு தளமாக இதை உருவாக்க விரும்பினர். ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தின் இணைப்பை எத்தனை இணைய தளங்கள் பகிர்கிறன்றன என்பதை அடிப்படையாக வைத்து இந்த தரவரிசை உருவாக்கப்பட்டது.