2000 மார்ச் முதல் 2004 மே வரையிலான காலகட்டத்தில் விகடன் தனது இணையத்தளத்தைச் சொந்த எழுத்துருவில் வெளியிட்டது. அதன் பிறகு TAM எழுத்துருவைப் பயன்படுத்தி வந்தது. பின்னர் 2010 ஜூலை முதல் ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தத் தொடங்கியது. தொடக்கத்திலிருந்து ShreeTam எழுத்துருவைப் பயன்படுத்திய தினமலர் 2008க்குப் பிறகு படிப்படியாக ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தத் தொடங்கியது.
2004 முதல் 2006 காலகட்டத்தில் அமுதம் என்ற எழுத்துருவைப் பயன்படுத்திய தினகரன் பின்னர் சில காலம் TAM எழுத்துருவைப் பயன்படுத்தி 2009ல் ஒருங்குறிக்கு மாறியது. 2004லிலிருந்து தினமணிக்கென தனியான எழுத்துருவில் வெளிவந்து பின்னர் 2009 ஏப்ரல் 14 முதல் ஒருங்குறிக்கு மாறியது. இதில் சில ஊடகங்களின் உள்பயன்பாடு இன்னும் பழைய எழுத்துருவிலேயே உள்ளது. அவை வெளியிடும் பிடிஎப் கோப்புகளைப் பார்த்தால் இவ்வெழுத்துருவை இன்றும் காணலாம்.