ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது? எப்படி உதவி செய்வது?

55 வயதாகும் சாந்தாபாயின் குடும்பத்தில் எல்லாம் நன்றாகவே நடக்கிறது. கணவருக்கு நல்ல சம்பளம், படித்து முடித்த குழந்தைகள் வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக சாந்தாபாயால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை, அவருக்கு எதுவும் செய்யப் பிடிப்பதில்லை.

அன்றாட வாழ்வில் அவர் மகிழ்ச்சியை உணரவில்லை. தூக்கம் கெடுகிறது, அடிக்கடி வயிற்றுத் தொல்லைகள் வருகின்றன. அவரது நடவடிக்கைகள் மாறியிருப்பதைக் குடும்ப உறுப்பினர்கள் உணர்ந்தார்கள். சிலர், மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க அவர் இப்படி செய்கிறார் என்றார்கள். வேறு சிலரோ அதீத மகிழ்ச்சியால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் சொன்னார்கள்.

தொடர்ந்து வாசிக்க >> “மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது? எப்படி உதவி செய்வது?”

வாசகர் தேவை – அ.முத்துலிங்கம்

சிறுவயதில் ஆங்கிலப் பாடம் என்றால் நடுக்கம் எடுக்கும். வகுப்புக்குப் போக பிடிக்காது. ஆசிரியர் என்றால் பயம். ஆங்கிலக் கவிதைகளை மனனம் செய்து காலையில் ஒப்பிக்கவேண்டும். அப்படித்தான் அமெரிக்க கவிஞர் லோங்ஃபெல்லோ எழுதிய under a spreading chestnut tree பாடலைப் பாடமாக்கினேன். ஆனால் ஆசிரியருக்கு முன்னால் அது மறந்துவிட்டது.

ஒப்பிக்கமுடியவில்லை. அந்தப் பாடலை, அதை எழுதிய லோங்ஃபெல்லோவின் கையெழுத்தில் சமீபத்தில் பார்த்தேன். பொஸ்டன் நகரில் அவர் வாழ்ந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்றியிருக்கிறார்கள். அதே வீட்டில் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜோர்ஜ் வாசிங்கடனும் அதற்கு முன்னர் வாழ்ந்திருக்கிறார்.

தொடர்ந்து வாசிக்க >> “வாசகர் தேவை – அ.முத்துலிங்கம்”

நானும் கூட… (Me too) – வக்கிரமா? ஆத்திரமா?

இந்த நூற்றாண்டின்மிகப் பெரிய பிரச்னையாக முன்வைக்கப்படுவது பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், சீண்டல்கள்தான். ஆனால், இது இன்று நேற்று ஏற்பட்ட பிரச்னை அல்ல. புராண இதிகாச காலம் தொடங்கி பெண் மீதான இந்த வன்முறை மற்றும் சீண்டல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
மகாபாரதத்தில் அஞ்ஞாதவாசத்தின்போது திரெளபதி பணிப்பெண்ணாகப் பணியில் இருக்கும்போது கீசகன், அவளுக்குத் தரும் தொந்தரவுகளில் தொடங்கி காலம் காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பிரச்னை.

தொடர்ந்து வாசிக்க >> “நானும் கூட… (Me too) – வக்கிரமா? ஆத்திரமா?”

தாயம்மாவின் தாகம் தண்ணீர்த் தாயகம்

பொன்னகரில்தான் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில்நுட்ப பீடம் எல்லாம் உள்ளன. அத்தனையும் புத்தம் புதிய கட்டிடங்கள். நவீன அமைப்பில் புதுப்பொலிவோடு ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று பீடங்களுக்குமான நில அளவு எவ்வளவு தெரியுமா? கொஞ்ச நஞ்சமல்ல 650 ஏக்கராகும். இந்தப் பெரிய நிலப்பரப்பில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால்….! அதிலும் ஆக மூன்றே மூன்று பீடங்கள் மட்டும்தான் என்றால் எவ்வளவு பெரிய இடத்தில் சும்மா சுற்றிக் காடளக்கலாம். காற்றை அளையலாம். விரும்பிய பாட்டுக்கு எங்கும் திரியலாம். மாலை நேரத்தில் மயில்கள் வந்து உலாத்தும். சிலவேளைகளில் மான் கூட்டத்தையும் பார்க்கலாம்.

தொடர்ந்து வாசிக்க >> “தாயம்மாவின் தாகம் தண்ணீர்த் தாயகம்”

நீ ஸேக்‌ஷ்பியரிலும் மோசமாய் எழுதுகிறாய்!

Captureநான் இப்பொழுது கடைகளில் புத்தகம் வாங்குவதில்லை. ஏனென்றால் முதலில் வாங்கிய புத்தகங்களைப் படித்து முடிக்க வேண்டும். அப்படிப் படித்து முடித்தாலும் இருக்கும் புத்தகங்களை வைப்பதற்கே இடமில்லை. அவை அறைகளை நிறைத்து கூரையைத் தொட்டுவிட்டன. புது நூல்களை வாங்கி என்ன செய்வது? என் வீட்டில் புத்தகங்கள் இல்லாத ஒரே இடம் எரிகலன் அறைதான்.

இந்த நிலையில் என் வீதியில் இருக்கும் ஒரு வீட்டில் garage sale என்று அறிவித்திருந்தார்கள். நவராத்திரி கொலு போல தவறாமல் கோடை மாதங்களில் இந்த விற்பனை எங்கள் ரோட்டில் நடைபெறும்.

நான் அங்கே சென்று பார்த்தபோது அந்த வருடம் முழுக்க உழைத்த பல சாமான்கள் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து வாசிக்க >> “நீ ஸேக்‌ஷ்பியரிலும் மோசமாய் எழுதுகிறாய்!”

ToTop