ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

அலைபேசியின் ஆபத்துக்கள்

cellphoneஇது அலைபேசியின் (செல்போன்)யுகம் என்று சொல்வது மிகையே அல்ல. இன்று அங்கிங்கெனாதபடி எங்கும் எல்லாருடைய கைகளிலும் தவழ்கிறது இந்த கைபேசி. இந்த அலைபேசியினால் பல நன்மைகள் கிடைக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. சிறந்த, விரைவான, எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய தொலைத் தொடர்பு சாதனம் இது. வணிகர்கள், பயணிகள், மருத்துவர்கள் என பல தரப்பட்ட மக்களுக்கும் அவசரத் தொடர்பு ஆதரவாளனாக அலைபேசி விளங்குகிறது.

இருப்பினும், அலைபேசியின் ஆபத்துகள் பற்றியும், தீமைகள் பற்றியும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் அறிவியலாளரும், சமூக ஆர்வலர்களும். அலைபேசியினால் கிடைக்;கும் நன்மைகளைவிட, ஏற்படும் ஆபத்துகளே அதிகம் என்று இவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்ந்து வாசிக்க >> “அலைபேசியின் ஆபத்துக்கள்”

மன அழுத்தம் – கட்டுப்படுத்துவது எப்படி?

stressசரியான திட்டமிடுதல், அவசர மற்றும் அவசியப் பணிகளை முதலில் முடித்தல், வேலைப்பளுவில்அவ்வப்போது ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல் தனிமை மற்றும் எதிர்மறை சிந்தனைகளைத்தவிர்த்து நேர்மறை சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், தியானம்,உடற்பயிற்சிகள், பொழுதுபோக்குக்காட்சிகள் முதலானவை மனஅழுத்தத்திற்கு மருந்துகளாக பலராலும் அவ்வப்போது பரிந்துரைக்கப்படுகின்றன.

இவைகளெல்லாம் சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும் இவற்றில் செயல்வடிவில் உள்ள பிரச்சினைகள் அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே எளிதில் புரியும்.இந் நோயியில் இருந்து நிவாரணம் பெற என்ன செய்ய வேண்டும்? மன அழுத்தம் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை தடை செய்ய கீழுள்ள ஆலோசனைகளை பின் பற்றுங்கள், அவை உங்களுக்கு உதவக்கூடும்.

தொடர்ந்து வாசிக்க >> “மன அழுத்தம் – கட்டுப்படுத்துவது எப்படி?”

கம்ப்யூட்டர்

computer_cartoonஅதனுடைய பார்வை எனக்கு துண்டாய் பிடிக்கவில்லை. அது இருந்த விதமும், தோற்றமும் வெறுப்பைக் கூட்டியது. மேசை மேல் சவடாலாகப் பரப்பிக்கொண்டு கல்லுளி மங்கன் போல சப்பளிந்துபோய் இருந்தது.

ஆணா? பெண்ணா? என்றுகூட சரியாகத் தெரியவில்லை. கம்புயூட்டர்களில் ஆண், பெண் பேதம் இருப்பது எனக்கு கன நாளகத் தெரியாது. அதைக்கண்டு பிடிப்பதற்கு என்ன குறுக்குவழி என்பதையும் அப்போது யாரும் சொல்லித் தந்திருக்கவில்லை. சில நிபுணர்கள் பார்த்த வாக்கிலேயே சொல்லிவிடுவார்களாம். பெண்ணென்றால் வழிக்குக் கொண்டு வர கனநாள் ஆகும். பிகு செய்துகொண்டே இருக்குமாம்.

தொடர்ந்து வாசிக்க >> “கம்ப்யூட்டர்”

இறுதித் தேர்வு

technologyகாலை சரியாக ஐந்து மணிக்கு அவளுடைய செல்பேசி அலாரம் ஒலித்து அவளை  எழுப்பியது. அதை அணைத்துவிட்டு படுக்கையில் இருந்தபடியே எட்டி காப்பி மெசின் பட்டனை தட்டினாள். அது கிர் என்று சத்தத்துடன் உயிர் பெற்றது. செல்பேசியில் அன்றைய கால நிலையை பார்த்துவிட்டு முக்கியமான பத்திரிகை செய்திகளையும் படித்தாள்.

ஓர் இணையதளம் விலைக்கு வந்தது. அதை வாங்கி விற்றதில் 2000 டொலர் லாபம் கிடைத்தது. அதை செல்பேசி மூலம் நேரே தன் வங்கிக்கு அனுப்பினாள். அவளுடைய 19வது பிறந்தநாளுக்கு 367 வாழ்த்துக்கள் வந்திருந்தன. அவற்றிற்கெல்லாம் ’நன்றி’ என்று ஒரு வார்த்தையில் பதில் அனுப்பினாள். காப்பி, கடுதாசி குவளையில் தயாராகி பாலும் சீனியும் அளவாக கலந்து டிங் என்ற ஒலியுடன் இறங்கி நின்றது. அவள் ஒரு மிடறு பருகினாள்.

தொடர்ந்து வாசிக்க >> “இறுதித் தேர்வு”

சமூக வலைத்தளங்கள்: கொஞ்சம் நிமிர்ந்து பாருங்கள்!

connectionsகெளரி தன் காதலன் சங்கரைத் தேடிச் சென்னைக்கு வருகிறாள். ஆனால் அவள் வருவதாகத் தெரிவித்து எழுதிய கடிதம் சங்கருக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. அவள் வழி மாறி இறக்க நேரிடுகிறது. இது 1988இல் வெளிவந்த இதயக்கோயில் படத்தில் உள்ள ஒரு சம்பவம். The Notebook என்ற ஆங்கிலப் படத்தில் நாயகன் தன் காதலிக்கு 365 கடிதங்களை எழுதுகிறான். அவை எல்லாமும் கிடைக்காமல் போய்விடுகிறது. இருவரும் வேறு ஒருவருக்கு நிச்சயயிக்கப்படுகிறார்கள்.

தொடர்ந்து வாசிக்க >> “சமூக வலைத்தளங்கள்: கொஞ்சம் நிமிர்ந்து பாருங்கள்!”

ToTop