ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

கீதையில் மனித மனம்

'கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்' நூலிலிருந்து
அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை.

மனிதனின் மனதைப் பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்கு வாதம் நடக்கிறது.

கண்ணன் சொல்கிறான் :

தொடர்ந்து வாசிக்க >> “கீதையில் மனித மனம்”

நிம்மதியாய் இருக்க உபாயம்

சலிப்போ- களிப்போ எதுவானாலும் அதற்கு நம் நினைப்புத்தான் காரணமாகும். நம்மைப்பற்றியே நாம் கவலைப்படத் துவங்கினால் உலகத்திலே அதிக துன்பமுள்ள மனிதன் நாம் தான் என்று நமக்குத் தோன்றும். ஆனால் தன்னைப் பற்றியே யோசிக்கிற அந்த மனோபாவம்தான் மகிழ்ச்சியான நேரத்தில் தன்னைப் போல கொடுத்து வைத்தவன் யாருமில்லை என்று நினைக்க வைக்கும். வாழ்க்கையில் மனம் அதிகமாக அலட்டிக் கொள்ளாமலிருக்க எல்லோரைப் பற்றியும் அவ்வப்போது சிந்திக்கிற இயல்பை வளர்க்க வேண்டும்.
தொடர்ந்து வாசிக்க >> “நிம்மதியாய் இருக்க உபாயம்”

நாம் உயர்வு பெற வேண்டுமானால்…

பகவத் கீதையின் ஸாராம்சம்

"கர்மண் ஏவாதிகாரஸ்தே மாபலேஷு கதாசன
மாகர்ம பலஹேதுர்பூ மா தே ஸங்கோஸ்த்வகர்மணி"

நாம் ஒரு செயலைச் செய்யத் துவங்கும்போது, பலன் அமைவது நம் வசத்தில் இல்லை என்பது தெரிந்தாலும், பலனை எதிர்பார்த்துதான் நாம் செயல் புரிகிறோம். இந்த எதிர்பார்ப்பு, நம் விருப்பு, வெறுப்புகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை அடிப்படையாகக் கொண்டது. இந்த எதிர்பார்ப்பு பொதுவாக அனைவருக்குமே உள்ளது என்பதால், இது பிரச்சனை அல்ல. பலன் கிடைக்கும்போது நாம் அதை எதிர்கொள்ளும் விதம்தான் பிரச்சனையை உருவாக்குகிறது. தொடர்ந்து வாசிக்க >> “நாம் உயர்வு பெற வேண்டுமானால்…”

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்! யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்!

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

தீய செயல் குறித்து தெய்வத்தின் முன்னால் வெட்கப்படாதே! மனிதன் முன்பாக வெட்கப்படு! அப்பொழுதே உனக்கு விமோசனம் ஆரம்பம்!

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!

தொடர்ந்து வாசிக்க >> “நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!”

உலகத்தை முழுக்கப் பார்க்காமலேயே உலக வாழ்க்கை வெறுத்துவிட்டது என்று அலுத்துக்கொள்கிறோம்.

யாருமற்ற தனிமையில் கடற்கரையில் நின்றிருக்கிறீர்களா…மனசு ஏதோ ஒரு பாடல் பாட, உள்ளுக்குள் உற்சாகம் ஊறத் துவங்க, இயற்கையின் மடியில் நாமே ஒரு குழந்தையாகிப் போவோம்!
புதிய புதிய இடங்களுக்குப் பயணப்படும் போதெல்லாம் வழிகளில் தென்படும் நதிகள், வயல்வெளிகள், மலைச்சரிவுகள், பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் என பார்ப்பதெல்லாமே மனசுக்கு அத்தனை சந்தோஷம் தரும். ஒரு நல்ல பயணம் நம்மைப் புதுப்பித்துத் தரும்.

ஆனால், நம்மில் பெரும்பாலோருக்கு வேலை-வீடு என ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே முடிந்துபோகிறது வாழ்க்கை. சென்னையில் இருந்து கொண்டே கடற்கரை பார்க்காதவர்கள் எத்தனை பேர் உண்டு தெரியுமா! அடுத்த தெருவிலிருக்கிற பூங்காவுக்குள் போய் அரை மணி நேரம் செலவழிக்க முடியாதவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள்.

தொடர்ந்து வாசிக்க >> “உலகத்தை முழுக்கப் பார்க்காமலேயே உலக வாழ்க்கை வெறுத்துவிட்டது என்று அலுத்துக்கொள்கிறோம்.”

ToTop