ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

சிரிப்பு

சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்
அழுங்கள், நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டிருப்பீர்கள்.
இன்று வாழ்வில் நாம் திரும்பிப் பார்க்கும் திசையில் எல்லாம் தெரிபவை இரண்டு.
அவைகளில் ஒன்று திருப்தி. மற்றென்று பேராசை. இந்த இரண்டும் தனித்தனியாக்கூட
இல்லை. உள்ளங்கையும் புறங்கையும் போல ஒன்றின் இருபக்கங்களாக இருக்கின்றன.
யாரிடம் பேராசை இருக்கிறதோ அவரிடம் மறுபுறம் திருப்தியும் இருக்கிறது. கிடைத்தற்குப் திருப்திப்பட்டுக் கிடைக்க வேண்டியதற்காக உழைக்கும் ஆரோக்கியமான மனநிலை தென்படவில்லை. காரணம், மன இறுக்கம், மன உழைச்சல்.

தொடர்ந்து வாசிக்க >> “சிரிப்பு”

சமய வளர்ச்சிக்கு சமூகம் செய்யும் சாத்தியங்கள்

தர்மம் , சத்தியம் நமக்கு இருக்குமானால் சமயத்தில், பல சாத்தியங்களை உண்டாக்கலாம் ; உருவாக்கலாம் ; சாதனை புரியலாம்.

ஒரு துறையில் மட்டுமல்ல ; பல துறைகளில் , நாம் நமது ஒன்றுமையைக்
கட்டிக் காக்கலாம். கல்வி , கலாச்சாரம் , பாரம்பரிய சம்பிரதாங்களையும் போற்றிப் பேணலாம். இதனால் எண்ணியவைகளைக் கனவாகாமல் முடிக்கலாம். இதனால் திண்ணியவராகப் பெறலாம். தொடர்ந்து வாசிக்க >> “சமய வளர்ச்சிக்கு சமூகம் செய்யும் சாத்தியங்கள்”

சித்தர்களின் சமுதாய சம நோக்கு

முதலில் சித்தர்கள் ‘ காடே திரிந்தென்ன’ ‘கந்தையே உடுத்தென்ன” ஒடே எடுத்தென்ன ‘ என்று ஓரிடத்திலும் தங்காமலும் எதனையும் சொந்தமெனக் கொள்ளாமலும்-நாடோடி வாழ்க்கை வாழ்ந்தாலும் அவர்கள் சமுதாயத்தைப் பற்றிய முழுமையான கண்ணோட்டம் கொண்டவர்களாக இருந்தனர். தொடர்ந்து வாசிக்க >> “சித்தர்களின் சமுதாய சம நோக்கு”

தசரா

தசம் என்றால் பத்து தசரா என்றால் பத்து நாள்கள் கொண்டாடக்கூடிய விழா. இவ்விழாபுரட்டாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது. பொதுவாகப் புரட்டாசி மாதம் பெண் தெய்வங்களின் வழிபாட்டுக்குரிய மாதமாகும். ஐப்பசி அஷ்டமி துர்காஷ்டமியாகவும், நவமி ஆயுத பூஜையாகவும், தசமி விஜயதசமியாகவும், ஐப்பசி மாத அமாவாசை தீபாவளிப் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க >> “தசரா”

அம்பாளின் வேத வடிவங்கள்

ஆதி சக்தியான அம்மையின் வடிவம்

முதற்முதற் கடவுளாகிய பரம்பொருளின் அருள் ஆற்றலே சக்தியென வழங்கப்பெறுவது.
அவற்றுள்ளும் அம்மையாகக் கருதி வழிபடுவது முற்பட்டது. தொடர்ந்து வாசிக்க >> “அம்பாளின் வேத வடிவங்கள்”

ToTop