ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

கண்சிமிட்டும் நேரத்தில் 18 படங்களை பதிவிறக்கம் செய்யலாம் – லைஃபை இருந்தால்!

lifiஉலக அளவில் தகவல் பரிமாற்றத்தின் அவசியம் கருதி இணையம் சார்ந்த கருவிகளின் வளர்ச்சி கணக்கிட முடியாத அளவிற்கு வளர்ந்து கொண்டே உள்ளது. இணையத்தின் வளர்ச்சி எந்த அளவிற்கு உயர்ந்துள்ளதோ அதை விட பல மடங்கு, தகவல் பரிமாற்றத்திற்கான தொழில்நுட்ப தேவைகளும் அதிகரித்துள்ளது.

எதிர்வரும் 2019-ம் ஆண்டிற்குள் தகவல் பரிமாற்றத்தின் அளவு 35 க்வின்ட்டில்லியன் பைட்சாக (Quintillion Bytes) இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் நாம் தற்போது பயன்படுத்தி வரும் வைஃபை  தொழில்நுட்பமான, மின்சாரப் பயன்பாடு உள்ள காலத்தில் தீப்பந்தத்தை பிடித்துக் கொண்டு நடப்பதற்கு சமமாகி விடும். அதனால் எதிர்கால தேவை கருதி ஆராய்ச்சியாளர்கள் லைஃபை (Lifi) தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு தயாராகி வருகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க >> “கண்சிமிட்டும் நேரத்தில் 18 படங்களை பதிவிறக்கம் செய்யலாம் – லைஃபை இருந்தால்!”

தொழில் நுட்பங்களால் பாதிக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்

pc_userஇன்றைய உலகில், நவீன தொழில் நுட்பம் இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் எண்ணிப் பார்க்கக் கூட இயலாது. இவை தரும் உலகியல் மாயமான ஒன்றாக உள்ளது. ஆனால், இவற்றால் நாம் பெறும் பாதிப்பு உண்மையானதாக உள்ளது. அப்படியானால், இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க நாம், இவை அனைத்தையும் விலக்கி வைத்து, கற்காலத்திற்குச் செல்ல வேண்டுமா? என்று ஒருவர் கோபமாக நம்மிடம் கேள்வி கேட்கலாம்.

இந்த கேள்விக்குப் பதில், நாம் எப்படி நவீன தொழில் நுட்பத்தினால் பாதிக்கப்படுகிறோம் என்பதனை அறிந்து, அந்த பாதிப்புகளிலிருந்து எப்படி விடுபடலாம் என்பதற்கான வழி முறைகளைக் காண்பதில் தான் உள்ளது. இங்கு அப்படிப்பட்ட பாதிப்புகள் எவை என்பதனையும், அவற்றிலிருந்து விடுபட நாம் என்ன வழிகளை மேற்கொள்ளலாம் என்பதையும் காணலாம்.

தொடர்ந்து வாசிக்க >> “தொழில் நுட்பங்களால் பாதிக்கப்படும் உடல்நிலையும் மன நிலையும்”

கூகுள் தந்த பதினெட்டு ஆண்டு சேவை

google_logoஒவ்வொரு நொடியிலும், ஏறத்தாழ 40 ஆயிரம் கேள்விகளைப் பெற்று அவற்றிற்கான பதில்களை நொடியில் நமக்குத் தரும் திறன் படைத்த, கூகுள் தேடுதல் தளம் தொடங்கப்பட்டு, 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆம், Google.com என்ற பெயருடன் தேடுதல் தளம் அமைக்கப்பட்டு ஆண்டுகள் 18 கடந்துவிட்டன. இணையத்தில், எல்லையற்ற தகவல்களை மக்களின் பயன்பாட்டிற்குத் தேக்கி வைத்துத் தரவேண்டும் என்ற இலக்குடன், லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் தொடங்கி வைத்த கூகுள் தேடல் தளம், தன் 18 ஆண்டுகள் சேவையை முடித்துத் தொடர்ந்து செயல்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க >> “கூகுள் தந்த பதினெட்டு ஆண்டு சேவை”

மிகப் பெரிய தொழில் நுட்ப மேம்பாடுகளுடன் செல்லினம் 4.0 வெளியீடு

Sellinam-4.0-Logo-300x100இன்று மாலை 7.30 மணிக்கு கோலாலம்பூரில் தொடங்கிய “இணைமதியம்” என்னும்  தொழில்நுட்ப விழாவில், கையடக்கக் கருவிகளில் புகழ்பெற்றத் தமிழ் உள்ளீட்டுச் செயலியான ‘செல்லினம்’ – நான்காம் பதிகையாக மிகப் பெரிய தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் அறிமுகம் கண்டது.

முரசு அஞ்சல் மென்பொருளின் 30ஆம் ஆண்டு நிறைவு விழாவாகக் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில், செல்லினத்தின் புதிய பதிகையில் உள்ள  தொழில் நுட்பக் கூறுகளையும் புதிய மேம்பாட்டு நுணுக்கங்களையும் அதன் தொழில்நுட்ப வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன், செயல்முறைக் காட்சிகளுடன் விளக்கினார்.

தொடர்ந்து வாசிக்க >> “மிகப் பெரிய தொழில் நுட்ப மேம்பாடுகளுடன் செல்லினம் 4.0 வெளியீடு”

“முரசு அஞ்சல் முதல்நிலைப் பதிப்பு”– இன்று முதல் அனைவருக்கும் இலவசம்!

Murasu-Anjal-New-Logo--300x105“முரசு அஞ்சல் முதல்நிலைப் பதிப்பு”– இன்று முதல் அனைவருக்கும் இலவசம்! முத்து நெடுமாறனின் இன்ப அதிர்ச்சி தரும் அறிவிப்பு!
கடந்த 30 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் “முதல்நிலைப் பதிப்பு” எனும் சிறப்புப் பதிகை இன்று முதல் பயனர்களின் சொந்தப் பயனுக்கு இலவசமாகவே வழங்கப்படும் என்று அதன் உருவாக்குநர் முத்து நெடுமாறன் இன்று அறிவித்தார்.

இன்று மாலை 7.30 மணிக்குத் தொடங்கிய “இணைமதியம்” என்ற தலைப்பிலான முரசு அஞ்சல் மென்பொருளின் 30ஆம் ஆண்டு நிறைவு விழா, செல்லினம், செல்லியல் தளங்களின் புதிய தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்த அறிமுகத்தோடும் நடந்தேறியது.

தொடர்ந்து வாசிக்க >> ““முரசு அஞ்சல் முதல்நிலைப் பதிப்பு”– இன்று முதல் அனைவருக்கும் இலவசம்!”

ToTop