ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

லிப்ரெஓபிஸ் 4.3 வெளியீடு

libreofficeகோலாலம்பூர், ஆகஸ்ட் 3, 2014 – இன்று தமிழா! குழுவினர் லிப்ரெஓபிஸ் 4.3 இன் வெளியீட்டை அறிவித்தனர். உலகெங்கிலும் பரவிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்களின் உடனுழைப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்த லிப்ரெஓபிஸ், இன்று எல்லாவிதத் தேவைகளையும் நிறைவு செய்யும் ஒரு மிகச் சிறந்த அலுவலகத் தொகுதியாக வளர்ந்திருக்கிறது.

‘லிப்ரெ’ என்றால் விடுதலை என்று பொருள்பட அமைந்துள்ள லிப்ரெஓபிஸ் ஒரு கட்டற்ற திறமூல மென்பொருள் ஆகும். அது முழுக்க முழுக்க தமிழில் அமைந்திருப்பது மட்டுமல்லாது, அனைவருக்கும் இலவசமாகவே கிடைக்கிறது. அதன் சுத்தமான முகப்பும் சக்திவாய்ந்த கருவிகளும் பயனர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் அவர்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவும்.

தொடர்ந்து வாசிக்க >> “லிப்ரெஓபிஸ் 4.3 வெளியீடு”

மறைந்து போகும் தொழில் நுட்பங்கள்

smartwatchநம் உலகம் அதி வேகத்தில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஒரு காலத்தில் ஓஹோ என்று பேசப்பட்ட தொழில் நுட்பங்கள் இன்று மறைந்து வருகின்றன. எந்த மக்களாலும் பயன்படுத்தப்படுவதே இல்லை. இதே போல, இப்போது உள்ள சில தொழில் நுட்பங்களும் மறையும் வாய்ப்புகளை இப்போதே காட்டி வருகின்றன. இது குறித்து இங்கு பார்க்கலாம்.

ஒரு காலத்தில், வி.சி.டி. ப்ளேயர் ஒன்றினைச் சரியாக இயங்க வைத்து, அதன் காட்சியை இணைக்கப்பட்ட டிவியில் காட்டும் ஒருவர், பெரிய தொழில் நுட்பம் தெரிந்தவராக்க கருதப்பட்டார். தொடர்ந்து வி.சி.ஆர். வந்தது. 

தொடர்ந்து வாசிக்க >> “மறைந்து போகும் தொழில் நுட்பங்கள்”

அச்சுறுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டர்

Desktop_PCநம் வாழ்வில் ஓர் அங்கமாக பெர்சனல் கம்ப்யூட்டர் கலந்துவிட்டது. அதன் அசாத்திய செயல் திறன், நம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளக் கிடைக்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் என அடித்தட்டு மக்களுக்கும், விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் உற்ற தோழனாய் உள்ளது. இருந்தாலும், இது ஓர் அச்சுறுத்தும் நண்பனாகத்தான் நம் கண் முன்னே இயங்குகிறது. இதனை இயக்குவது மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி நமக்கு நிரந்தரமானதாக இல்லை. எப்போதும் ஒருவித பயத்துடன் தான், நாம் இதனை இயக்குகிறோம். இந்த அச்ச உணர்வினைத் தூண்டும் சிக்கல்களை நாம் பொறுத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை. தொடர்ந்து வாசிக்க >> “அச்சுறுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டர்”

கூகுள் கடந்து வந்த 15 ஆண்டுகள்

google-birthday-cake15பதினைந்து ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 27ல், மக்கள் தங்கள் இணைய உலாவில், கூகுள் தேடுதளத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். அப்போது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இல்லை; குரோம்புக் பயன்படுத்தி யாரும் வீடியோ பார்க்கவில்லை; கூகுள் கிளாஸ் அணிந்து பாட்டு கேட்கவில்லை; அல்லது ஹாட் பலூன் தரும் இணைய இணைப்பில் தேடலை மேற்கொள்ளவில்லை. சாதாரண தேடு தளம் தரும் நிறுவனமாக, 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப் பட்ட கூகுள் நிறுவனம், தொடர்ந்து வாசிக்க >> “கூகுள் கடந்து வந்த 15 ஆண்டுகள்”

நடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே !

நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அமைப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. 20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. தொடர்ந்து வாசிக்க >> “நடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே !”

ToTop