நாடு விட்டு நாடு வந்தோம்
நலங்கள் பல தேடி வந்தோம்
நம்பினோரை விட்டு வந்தோம்
நயவஞ்சகரையும் விட்டு வந்தோம்
கவிதைகள் – நளினி
ஈழப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் புனையப்பட்ட கவிதைகள் .
அம்மா நீ எங்கே?
உலகிலே சிறந்தது
உயிரினும் மேலாலனது
உன் பாசம்;
உன் நேசம்;
உன் அன்பு;
உன் அரவணைப்பு
எல்லாமே தேவையே எனக்கின்று
அம்மா நீ இன்று
எவ்வூரில் ஓடுகின்றாய்?
காலனே காத்திரு
காலமது வந்து விட்டால்
காலனவன் உயிர் பறிப்பான்
பெரியவர்கள் சொன்னார்கள்
படித்தறிந்த உண்மைகளாய்
உயிர்
சூல் கொண்ட மேகங்கள்
சூழ்ந்தங்கே வந்ததினால்
சுடர் தந்த சூரியனும்
சுடரொளியை மறைத்துவிட்டான்
விமானங்கள்
ஊனமுது கொள்வதில்லை
ஊரவரை நினைத்துவிட்டால்
சயனிக்க மனமில்லை
சஞ்சலமே நிறைந்ததனால்