
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது ஆஸ்பத்திரி.
இன்னும் டாக்டர்களுக்கும் நர்சுகளுக்கும் தேவையான
பாதுகாப்பான உடையும் சானிடைசர்களும் முகக்கவசமும்
கூட தேவையான அளவு கொடுக்கப்படவில்லை என்ற
புகார் ஓங்கி ஒலித்தது. அதைக் கேட்டுக்கொண்டு எந்தப் பதிலும் சொல்லாமல் டாக்டர் அரவிந்த் “நாளை சந்திப்போம்” என்று சொல்லிக்கொண்டே காலையில் நடந்த மீட்டிங்கிலிருந்து வெளியேறினான்.