ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

கணினியில் தமிழ் தட்டச்சு செய்யும் முறை

nhmஎன்.எச்.எம் செயலியின் துணையுடன் கணினியில் தமிழில் எப்படி தமிழ் தட்டச்சு செய்யலாம் என்பதனை இந்தக்காணொளி விளக்குகின்றது.

தொடர்ந்து வாசிக்க >> “கணினியில் தமிழ் தட்டச்சு செய்யும் முறை”

தடைகளைக் தாண்டுவது எப்படி ?

swamiகணவன் மனைவிக்கு இடையே சண்டை வருவதற்கான காரணங்களைப் பட்டியல் போட்டால் அதில் முதலிடத்தில் நிற்பது காசோ, பணமோகூட இல்லை !

வார்த்தைகள். உச்சரிக்கிற அந்தக் கணமே காற்றில் கரைந்து போகிற வார்த்தைகள்தான். கணவன் – மனைவி உறவில் கசப்பு வளர்வதற்கு முதல் காரணம் ! இந்த வெறும் வார்த்தைகள்தான் பல தம்பதிகளை கோர்ட வாசல் வரை கொண்டு போயிருக்கின்றன ! இந்த வெறும் வார்த்தைகள் தான் பல தம்பதிகளை ஒரே வீட்டுக்குள் அந்நியர்கள் போலவும் வாழவைக்கிறது !

தொடர்ந்து வாசிக்க >> “தடைகளைக் தாண்டுவது எப்படி ?”

புதிய தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள்

tamilFontகம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்திட, மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், நமக்கு மாறா நிலையில் கிடைப்பது ‘லதா’ என்ற பெயரில் கிடைக்கும் எழுத்துருதான். வேறு சில தமிழ் சாப்ட்வேர் மற்றும் ட்ரைவர்கள் வழங்குவோர், சில யூனிகோட் தமிழ் எழுத்துருக்களைத் தந்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை, அந்த சாப்ட்வேர் புரோகிராமுடன் மட்டுமே இயங்கும் தன்மை கொண்டவையாக உள்ளன. தனிப்பட்ட டி.டி.எப். எழுத்துவகையாக, தமிழ் யூனிகோட் கட்டமைப்பில் பயன்படுத்த, அண்மையில் தமிழ்ப் புத்தாண்டு அன்று, விசுவல் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனம், Uni Amma என்ற பெயரில், 15 வகை எழுத்துருக்களை வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க >> “புதிய தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள்”

விருப்பமோ இல்லையோ, விண்டோஸ் 10 கட்டாயம்!

win10_pushநீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? திடீரென ஒரு நாள், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு, உங்கள் கம்ப்யூட்டரை மேம்படுத்தக் கூடிய பைல்கள் அனைத்தும், உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்பட்டு, உங்களுடைய ஒரு கிளிக் செயல்பாட்டிற்காகக் காத்திருக்கும். “அய்யோ, நான் கேட்கவில்லையே? எனக்கு வேண்டாமே” என்று நீங்கள் சொன்னாலும், விண் 10க்கான பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரை வந்தடைந்திருக்கும். 

தானாக அனுப்பப்படும் இந்த செயல்பாடு, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, எத்தனை சாதனங்களில் கொண்டு செல்ல வேண்டுமோ, அத்தனை சாதனங்களிலும் அமைத்துவிட மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இது. சென்ற ஜூலை வரை, மைக்ரோசாப்ட் இலவச மேம்படுத்துதலை, நம் விருப்பத்தின் அடிப்படையிலேயே வைத்திருந்தது. ஆனால், சென்ற வாரத்திலிருந்து, நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, தேவை எனக் கருதுகிறீர்களோ இல்லையோ, மைக்ரோசாப்ட் பைல்களை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்பி, உங்களை விண் 10 ஐ ஏற்றுக் கொள்ளத் தூண்டுகிறது.

தொடர்ந்து வாசிக்க >> “விருப்பமோ இல்லையோ, விண்டோஸ் 10 கட்டாயம்!”

மரணம்..

deathஜனனம் பரிவைக் காட்டுகின்றது.
மரணம் பிரிவைக் காட்டுகின்றது
ஒரு ஆத்மா தான் செய்த பாவத்தை தீர்க்கவே பிறவி எடுக்கின்றது.
அது தீர்ந்ததும் போய்ச் சேர்ந்து விடுகின்றது.
அனைத்து உடலும் மண்ணுக்கே சொந்தம். அது மண்ணோடு மண்ணாக அழியும். ஆனால் ஆத்மா அழிவதில்லை.
பகவான் நம்மிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்துள்ளான் , அது முடிந்ததும் நமக்கும் அழைப்பு வரும்.
மரணம் தான் வாழ்க்கையின் கடைசிச் சத்தியம்.

ஜனனத்தின்பின் சத்தியம்  எவ்வளவோ நிகழ்வுகளை எடுத்துக் காட்டியுள்ளது. ஆனால் பிரிவு தான் அதை எல்லாம் விட நிரந்தர சத்தியம்.
நேற்றுவரை நம்மை யார் பார்த்தார்களோ பேசிக்கொன்டிருந்தார்களோ ஆதரவு காட்டினார்களோ அன்பைப் பொழிந்தார்களோ அவர்களை உறவாகத்தான் பார்க்கின்றோம். அத்தகைய உறவுகள் எல்லாம் இந்த உயிரைத் தந்தவனுக்கும் எடுப்பவனுக்கும் இடையில் பதிந்து கிடக்கின்றது.

தொடர்ந்து வாசிக்க >> “மரணம்..”

ToTop