ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

வரிசையில் நிற்கிறார்கள்; வாழ்வைத் தொலைக்கிறார்கள்!

'விடையிராதா
நீண்ட கேள்விகளால்
நிறைகிறது –
எதற்கெதற்காகவோ காத்திருக்கிற மனசு..
'நீண்ட பாலை நிலங்களில்
காய்ந்த புற்களை போல்
தொலைத்திட்ட ஆசைகள்
மரணத்தை மட்டும் மிச்சம் வைத்துக் கொண்டு
எல்லாவற்றிற்குமாகவும்; காத்திருக்கவே செய்கிறது..

தொடர்ந்து வாசிக்க >> “வரிசையில் நிற்கிறார்கள்; வாழ்வைத் தொலைக்கிறார்கள்!”

இணையத்தின் வரலாறு

storyofwebநீங்கள் ஏதேனும் சமூக இணையதளத்தில் அக்கவுண்ட் வைத்திருந்தால், சென்ற மாத இறுதியில், சென்ற 2014 ஆம் ஆண்டில் நீங்கள் என்ன செய்தீர்கள், சிறப்பு என்ன என்று ஒரு சிறிய வீடியோ அல்லது படத் தொகுப்பு காட்டப்பட்டிருக்கும். பேஸ்புக் மற்றும் கூகுள் ப்ளஸ் ஆகியவை இதனைச் சரியாக மேற்கொண்டு வருகின்றன. இவற்றைப் பார்த்த போது, இணையம் இதுவரை என்ன செய்தது? எப்படி வளர்ந்தது? என்று யாராவது வீடியோ காட்சியாகக் காட்டினால், அதனை இணையத்தில் பதிந்து வைத்தால், எப்போது வேண்டுமானாலும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாமே என்ற எண்ணம் வந்தது.

தொடர்ந்து வாசிக்க >> “இணையத்தின் வரலாறு”

படித்தலும் படைத்தலும் எவருக்கும் பொது..

readingபொருளாதாரத்தில் வீழ்ந்தபோது இருந்ததைக் காட்டிலும் அது வளர்ந்தப்பொழுதில் எழுகிற போராட்டங்களே மனிதத்தைக் கொன்று மாடிவீடுகளைக் காப்பற்ற மட்டும் முந்திக்கொண்டு முன்நிற்கிறது. படிப்பு அறிவை வளர்க்க, அறியத்தர என்பதையும்தாண்டி பணத்தைக் குவிக்க பாதையை திசைதிருப்ப என்பதற்கான மூலதனமாகிப்போனது நமது வேகத்தின் விளைவோ என்னவோ, ஆனாலிது வளர்ச்சியின் குறையன்றி வேறில்லை.

மேல்படிப்பு படித்தவன் மேல், கீழ்வகுப்பில் கல்வி கற்றோர் சிறியவர் எனும் மனப்போக்கு எப்படி பணம் கொடுத்துவாங்கியச் சீட்டின் கணத்திலிருந்து வந்து தலையில் அமர்ந்துக்கொண்டதோ? தெரியவில்லை.

தொடர்ந்து வாசிக்க >> “படித்தலும் படைத்தலும் எவருக்கும் பொது..”

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகம்

win9

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை செவ்வாய்கிழமை அன்று (செப்டம்பர் 30ம் தேதி) அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் மொபைல் சாதனங்கள் மற்றும் இணையதளச் சேவைகளை மையமாக கொண்டு விண்டோஸ் 9 பதிப்பை நிறுத்திவிட்டு பல புதிய அம்சங்கள் சேர்த்து விண்டோஸ் 10 என்ற புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் பாரம்பரிய வழிகளில் செய்யும் சில செயல்களை மறுசீரமைப்பு செய்து மற்றும் யூசர்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டது போல விண்டோஸ் 10 இருக்கும் என்றும் உறுதி அளித்துள்ளது. 

தொடர்ந்து வாசிக்க >> “மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகம்”

லிப்ரெஓபிஸ் 4.3 வெளியீடு

libreofficeகோலாலம்பூர், ஆகஸ்ட் 3, 2014 – இன்று தமிழா! குழுவினர் லிப்ரெஓபிஸ் 4.3 இன் வெளியீட்டை அறிவித்தனர். உலகெங்கிலும் பரவிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்களின் உடனுழைப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்த லிப்ரெஓபிஸ், இன்று எல்லாவிதத் தேவைகளையும் நிறைவு செய்யும் ஒரு மிகச் சிறந்த அலுவலகத் தொகுதியாக வளர்ந்திருக்கிறது.

‘லிப்ரெ’ என்றால் விடுதலை என்று பொருள்பட அமைந்துள்ள லிப்ரெஓபிஸ் ஒரு கட்டற்ற திறமூல மென்பொருள் ஆகும். அது முழுக்க முழுக்க தமிழில் அமைந்திருப்பது மட்டுமல்லாது, அனைவருக்கும் இலவசமாகவே கிடைக்கிறது. அதன் சுத்தமான முகப்பும் சக்திவாய்ந்த கருவிகளும் பயனர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் அவர்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவும்.

தொடர்ந்து வாசிக்க >> “லிப்ரெஓபிஸ் 4.3 வெளியீடு”

ToTop