ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

திருப்பிக் கட்டமுடியுமா?

ankorwat1உலகின் பிரும்மாண்டமான இந்துக் கோவில் வளாகங்கள் எனப்படும் அங்கோர் வாட் சரித்திர பூமிக்கு சிங்கப்பூர் நண்பர் சரவணனுடன் சென்று மூன்று நாட்களை அங்கே கழித்தேன் . பதினோராம் நூற்றாண்டில் தமிழ், சமஸ்கிருத, பல்லவ, திராவிட கலாச்சாரங்களுடன் தொடர்புடைய மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில்களை விடப் பழமை வாய்ந்த கோவில்களான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், தொடர்ந்து வாசிக்க >> “திருப்பிக் கட்டமுடியுமா?”

மறுஜென்மம்

girlஅம்மாவின் காலடியில் படுத்திருந்தாள் கயல். பொழுது விடிந்ததும், நித்திரையால் எழுந்த தாய் கயலைப் பார்த்து சிரித்தபடி மெதுவாகத் தட்டியெழுப்பி,
“என்ன கயல், இண்டைக்குமா?, நித்திரையில நடக்கிற உன்ர வியாதி எப்பதான் உன்ன விட்டுப் போகப் போதோ தெரியல. சரி எழும்பு, ஸ்கூலுக்கு ரைம் ஆச்சு, போய் குளிச்சிட்டு வா”
கண்ணைக் கசக்கியவாறு எழுந்த கயல், சுற்றிப் பார்த்து விட்டு,“எப்பிடிமா நான் இங்க வந்தன்?”ஒன்றுமே தெரியாதது போல தாயிடம் கேட்டாள், தொடர்ந்து வாசிக்க >> “மறுஜென்மம்”

விண்டோஸ் 8: சந்தேகத் தளிர்களும் விளக்கங்களும்

முற்றிலும் மாறுபட்ட இயக்கத்துடன் வந்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரிடையே கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெற்று வருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டமே போதும் என ஒதுங்கியவர்களும், இதன் பயன்பாடுகளில் பலவற்றை விரும்பி, முழுமையாக இதற்கு மாறி வருகின்றனர். பலர், விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்து முழுமையாக அறிந்த பின்னரே, அதற்கு மாறுவது குறித்துச் சிந்திக்க வேண்டும் என எண்ணி செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான சில தகவல் துளிகள் இங்கு தரப்படுகின்றன. தொடர்ந்து வாசிக்க >> “விண்டோஸ் 8: சந்தேகத் தளிர்களும் விளக்கங்களும்”

ஆங்கில அம்மணி

அன்றொருநாள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் பேரூந்தொன்றின் ஓா் ஆசனத்தில் நான். யன்னல் வழியாக நடப்பவற்றை இரசித்துக்கொண்டிருந்தேன். அனேகமாக பேரூந்தின் அனைத்து இருக்கைகளுமே நிரப்பப்பட்டிருந்தன. எதற்காக இந்த தாமதம் என்ற கேள்வி என் மனதில். சற்று நேரத்தில் ஓர் அம்மணி தனது seat number ஐ தேடியவாறு வந்துகொண்டிருந்தார். எனக்குப்பின்னே அவரின் இருப்பிடம். பேரூந்து புறப்பட தாமதித்தமைக்கான காரணத்தை அறிந்து கொண்டேன். தொடர்ந்து வாசிக்க >> “ஆங்கில அம்மணி”

மயக்கம்

ஓா் அழகிய காலைப்பொழுது எங்கு பார்த்தாலும் குதுாகலம் கும்மாளம். மங்கலகரமான வாத்திய இசை முழங்க அந்த திருமண நிகழ்வு களைகட்டியிருந்தது. அனைவரும் மாப்பிள்ளையின் வரவிற்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தனா். தொலைவில் ஒரு பெரியவரின் குரல் ' மாப்பிள்ளை வந்திட்டார்'. மாப்பிள்ளையை வரவேற்க ஆரத்தியுடன் தயாராகினா் பெண்வீட்டார். திருமண நிகழ்வின் மொத்தக் கட்டுப்பாடும் வீடியோ எடுப்பவா்களின் கையில். தொடர்ந்து வாசிக்க >> “மயக்கம்”

ToTop