ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

வெண்புறா

எல்லோரும் இரவோடிரவாக நடந்தார்கள்.
தங்களால் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நடந்தார்கள்.
அவர்களில் ஒருத்தியாக ரம்யாவும் நடந்துகொண்டிருந்தாள். அவள் கைகளிலும் சிறிது பொருட்கள் இருந்தன. அவள் எங்கே போகின்றாள்? யாரிடம் போகின்றாள்? அது அவளிற்கு மட்டுமல்ல அதில் போகின்றவர்களிற்கே தெரியாத ஒன்று.
அவர்கள் எல்லோருக்கும் ஒரே பெயர். அது தான் அகதி. தொடர்ந்து வாசிக்க >> “வெண்புறா”

எரிமலை

ஓ இன்று கோகிலாவைப் பெண் பார்க்க வருகிறார்கள். அதுதான் கோகிலாவின் அண்ணி சுதா அவளை அலங்காரம் செய்துகொண்டிருந்தாள்.

கோகிலா அண்மையில்தான் கனடா வந்திருந்தாள். அவள் அண்ணன் ராகவனோ தன் தங்கை மீது உயிரையே வைத்திருந்தான். தன் தங்கைக்காக எதையுமே செய்யத் தயாராக இருந்தான். தொடர்ந்து வாசிக்க >> “எரிமலை”

அந்த அழுகையின் அர்த்தம் என்ன?

அந்த மரண வீட்டிலே பெரும் பாலானோர் அப்பிணம் வைத்திருக்கும் இடத்தருகே போய் சிறிது நேரம் நின்று அப்பிணத்தை ஒரு முறை உற்றுப் பார்த்து விட்டு வந்து இருக்கைகளில் அமர்ந்தனர். அவ்வாறு வருபவர்களை அழைத்து வருபவர்கள் அக்குடும்பத்தில் அப்பிணத்திற்குச் சொந்தக் காரர் என்று சொல்லவும் வேண்டுமா?
தொடர்ந்து வாசிக்க >> “அந்த அழுகையின் அர்த்தம் என்ன?”

தவிப்புக்கள்

பிள்ளைகளை நித்திரையாக்கிவிட்டு தன் கணவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் பல்கணியில் போயிருந்தாள். காலநிலை மிகவும் இதமாக இருந்தது. காற்று மெல்லியதாக இதமாக உடலை வருடிக்கொடுத்தது.வசந்த காலம் என்பதால் பல வண்ணங்களிலே பலவிதமான பூக்கள் பூத்துசொரிந்து கொண்டிருந்தன. பட்டமரங்கள் தளிர்விட்டு தாம் இன்னும் உயிருடன் இருப்பதை நினைவு படுத்தின. அவையும் எதிர்பார்ப்புகளுடன் தானே காத்திருந்திருக்கும்… தொடர்ந்து வாசிக்க >> “தவிப்புக்கள்”

சுயரூபம்

இன்று மாலதிக்கு விடுமுறை. இன்றாவது சிறிது நேரம் படுத்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டுதான் இரவு படுத்தவள். ஆனால் அதிகாலை மூன்று மணிக்கே டெலிபோன் வந்து அவளை எழுப்பிவிட்டிருந்தது. அதன்பின் அவளால் தூங்கவே முடியவில்லை. மனம் இருப்புக்கொள்ளவில்லை. பலமான காற்று வீசும்போது எல்லாமே பறப்பதுபோல நில்லாமல் நீந்திவரும் நினைவலைகளென பலவகையான எண்ணங்கள் அவள் மனத்திரையிலே வந்து வந்து அலைமோதிக்கொண்டிருந்தன. படுக்கையிலே புரண்டு புரண்டு படுத்தாள்.
தொடர்ந்து வாசிக்க >> “சுயரூபம்”

ToTop